ETV Bharat / health

ஃபகத் ஃபாசிலுக்கு ஏற்பட்டுள்ள ADHD பிரச்னை? - உளவியல் மருத்துவர் கூறுவது என்ன? - ADHD symptoms and treatment

ADHD symptoms and treatment: சமீபத்தில் ADHD நோய் குறித்து பிரபல நடிகர் பகத் பாசில் பேசிய நிலையில், இது குறித்து எஸ்ஆர்எம் (SRM) குளோபல் மருத்துவமனையின் தலைமை உளவியல் மருத்துவர் அருள் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

Fahadh faasil, doctor arul saravanan Image
ஃபகத் ஃபாசில், மருத்துவர் அருள் சரவணன் புகைப்படம் (Credits - ETV Bharat, SRM hospitals)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 29, 2024, 3:49 PM IST

சென்னை: பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் சமீபத்தில் கேரளாவில் ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், தனக்கு கவனக்குறைவு, அதிக செயல்பாடு குறைபாடு கோளாறு Attention-deficit/hyperactivity disorder (ADHD) இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த பிரச்னை சிறுவயது குழந்தைகளுக்கு ஏற்படும், ஆனால் 41 வயதான எனக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய முடியுமா என டாக்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மருத்துவர் அருள் சரவணன் பேசும் வீடியோ (Credits - SRM hospitals)

இதனையடுத்து, ADHD என்ற பிரச்னை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. உலக அளவில் பல அரசியல் தலைவர்கள், நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு தீர்வு என்ன என்பது குறித்து எஸ்.ஆர்.எம் (SRM) குளோபல் மருத்துவமனையின் தலைமை உளவியல் மருத்துவர் அருள் சரவணனை ஈடிவி பாரத் ஊடகம் அனுகியது.

அப்போது அவர் பேசியதாவது, “சமீபத்தில் பல பிரபலங்கள் அவர்களுக்கு உள்ள மனநல பிரச்னைகளை வெளிப்படையாக கூறுகின்றனர். அதில் ஒன்று ADHD, இந்த குறைபாடு உள்ளவர்கள் எந்த செயல் செய்தாலும், அதிவேகமாக செயல்படுவார்கள். இந்த குறைபாடு உள்ள குழந்தைகள், ஒரு இடத்தில் குறைந்த நேரம் அமைதியாக அமர்ந்து ஒரு செயலில் ஈடுபட முடியாமல் இருக்கும். எப்போதும் ஏதாவது ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். பெரும்பாலும், ஆண் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு இருப்பதால், அவர்களை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்கின்றனர்.

ஆனால், பெண் குழந்தைகளுக்கு inattention என்கிற கவனமின்மை அதிகமாக இருக்கலாம். ADHD குறைபாடு உள்ளவர்களுக்கு Hyper active, impulsive, inattention ஆகிய குறைபாடுகள் அதிகமாக இருக்கும். குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எழுதுவது, விளையாடும் போது உள்ளிட்ட பல செயல்களில் இந்த ADHD பிரச்னை ஏற்பட்டால் நாம் அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

6 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ADHD குறித்து தீர்க்கமாக கண்டறியப்பட்டு, அனுபவம் வாய்ந்த உளவியல் மருத்துவரை வைத்து சிகிச்சை வழங்கலாம். அதுமட்டுமின்றி, developmental pediatrics, clinical psychologists மருத்துவர்களைக் கொண்டு ADHD குறைபாடு உள்ளவர்களுக்கு தேவைக்கேற்ற உதவிகளை செய்ய முடியும். குழந்தைகளை நாம் அடிப்பது, மிரட்டுவது போன்ற செயல்கள் இந்த ADHD பிரச்சனைக்கு தீர்வாகாது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: 41 வயதில் நோயில் சிக்கிய ஃபகத் ஃபாசில்.. வெளியான அதிர்ச்சி தகவல்! - Actor Fahadh Faasil

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.