ETV Bharat / health

தெரிந்து கொள்ளுங்கள்: கருவுறுதல் பற்றிய கட்டுக் கதைகளும்... உண்மைகளும்...! - Fertility Myths - FERTILITY MYTHS

Fertility Myths: கருவுறுதலுக்காக கூறப்பட்டுள்ள சில கட்டுக்கதைகளையும் உண்மைகளை இத்தொகுப்பில் காணலாம்

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 10:40 PM IST

சென்னை: தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து, நகரங்கள் மாநகரங்கள் ஆனாலும், கட்டுக்கதைகள் என்னவோ மக்களை விட்டு விலகுவதில்லை. அதிலும் கருவுறுதலுக்கு மக்கள் கூறும் கட்டுக்கதைகள் அதிகம் தான். உலகளவில் கருவுறாமையால் மில்லியன் கணக்கான தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவுறாமை குறித்த தவறான தகவல்களால் பெண்கள் அடிக்கடி தங்களைத் தாக்கிக் கொள்கின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கருவுறாமை ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கட்டுக்கதைகளை நம்பி மேலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். ஒரு பொதுவான கட்டுக்கதை என்னவென்றால், குறிப்பிட்ட சில உணவுகளை உண்பது மலட்டுத்தன்மையை தடுக்கும் அல்லது மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பதாகும்.

இதை நம்பும் பெண்கள் அல்லது ஆண்கள் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் குறிப்பிட்ட உணவு முறைகளை கடைபிடிக்க தனக்குத்தானே அழுத்தம் கொடுக்கிறார்கள். அவ்வாறாக கூறப்பட்டுள்ள சில கட்டுக்கதைகளையும் உண்மைகளை இத்தொகுப்பில் காணலாம்.

கட்டுக்கதை 1 - அன்னாசி பழத்தின் நடுப்பகுதியை உட்கொள்வது உள்வைப்பிற்கு (கருவுற்ற முட்டை கருப்பைச் சுவற்றுடன் இணைக்கப்படும் நிகழ்வு) உதவுகிறது.

உண்மை: அண்ட விடுப்பின் பின்னர் அன்னாசிப்பழத்தின் நடுப்பகுதியை உட்கொள்வது உள்வைப்பிற்கு உதவுகிறது என்று சிலர் கூறுகின்றனர். அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமைலைன், இரத்தத்தை மெல்லியதாகச் செயல்படும் நொதிகளின் தொகுப்பு. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.

இருப்பினும் அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமைலைன் உள்வைப்பிற்கு உதவுகிறது என்பதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களோ, ஆய்வுகளோ இல்லை. அன்னாசி பழத்தில் விட்டமின் சி மற்றும் பி6 நிறைந்துள்ளதால், உடலுக்கு ஆரோக்கியம் தரும். ஆகவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அன்னாசிப்பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

கட்டுக்கதை 2 - இரட்டை குழந்தை வேண்டுமென்றால் சேனைக்கிழங்கு சாப்பிட வேண்டும்.

உண்மை: சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் ஹார்மோன் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் காரணமாக பல அண்ட விடுப்பை தூண்டும். இருப்பினும், சேனைக்கிழங்கு சாப்பிடுவது கருவுறுதலை அதிகரிக்காது.

கட்டுக்கதை 3 - மாதுளம் பழத்தை சாப்பிடுவது கருவுறுதலை மேம்படுத்தும்.

உண்மை: மாதுளம் பழம் சாப்பிடுவது ஆண் மற்றும் பெண்களின் கருவுறுதலில் நேர்மறையாக விளைவுகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள ஆக்ஸினேற்ற உள்ளடக்கம் கருப்பைக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, கருப்பை சுவற்றை தடுமனாக்கும். ஆயினும், ஆக்ஸினேற்றிகள் கருவுறுதலை எவ்வாறு உதவுகிறது என்று எந்த ஆய்வுகளிலும் நிரூபிக்கப்படவில்லை. ஆகவே இவற்றை புரிந்து கொள்வதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவை.

இதையும் படிங்க: உடலின் கன்ட்ரோல் ரூமான மூளையின் ஆற்றலை அதிகரிக்கனுமா? - நிபுணர்களின் டிப்ஸ் இதோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.