ETV Bharat / health

இந்தியர்களுக்கு கால்சியம், இரும்புச்சத்து குறைபாடு - சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்! - Indians deficient in micronutrients

author img

By ETV Bharat Health Team

Published : Aug 30, 2024, 12:47 PM IST

lancet study on indians: இந்தியாவில் உள்ள ஆண்களை விட பெண்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்வதில்லை என்ற தகவலை தி லேன்சட் குளோபல் ஜெல்த் ஜர்னல் வெளியிட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - ETV Bharat)

ஹைதராபாத்: இந்தியாவில் அனைத்து வயதிற்கும் உட்பட்ட ஆண்கள், பெண்கள் ஆரோக்கியத்திற்கு முக்கியமான, இரும்பு, கால்சியம், ஃபோலேட் (Folate) நுண்ணூட்டச்சத்துக்களை உட்கொள்வதில்லை என தி லான்செட் குளோபல் ஹெல்த் ஜர்னல் (The Lancet) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஆண்களை விட பெண்கள் போதுமான அளவு அயோடின் உட்கொள்வதில்லை என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, பெண்களை விட ஆண்கள் துத்தநாதம்(Zinc) மற்றும் மெக்னீசியத்தை போதுமான அளவு உட்கொள்வதில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

எதை பற்றிய ஆய்வு: '185 நாடுகளில் 15 நுண்ணூட்டச்சத்துக்களின் (Micro Nutrients) நுகர்வு பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. அதிலும், சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்தாமல் உணவுகள் மூலம் எடுக்கப்படும் நுண்ணூட்டச்சத்துக்கள் நுகர்வு குறித்து ஆய்வு செய்யப்பட்டது' என அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

உலக மக்கள் தொகையில் 99.3 சதவீதம் பேருக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பத்தில்லை என்றும் லான்சட் ஜர்னல் தெரிவித்துள்ளது. உலகளவில் 70% அல்லது 5 பில்லியனுக்கு அதிகமான மக்கள் போதுமான அயோடின், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் உட்கொள்வதில்லை என்று ஆய்வு தரவு கூறுகிறது.

வெவ்வேறு நாடுகளில், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண்கள் போதுமான அளவு அயோடின், வைட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து உட்கொள்வதில்லை. மேலும், பெண்களுடன் ஒப்பிடுகையில், அதிகமான ஆண்கள் போதுமான மெக்னீசியம், வைட்டமின் பி6, துத்தநாகம் மற்றும் வைட்டமின்-சி ஆகியவற்றை எடுத்துக் கொள்வதில்லை என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

சிகரெட் பழக்கம் இல்லாதவர்களுக்கும் சுவாசப் பிரச்சனை! அச்சுறுத்தும் PM 2.5

மைக்ரேன் தலைவலி பிரச்சனையா உங்களுக்கு? இதை சாப்பிட்டால் சரியாகுமாம்..மருத்துவர் கூறும் அட்வைஸ் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.