சென்னை: ஒரு மனிதன் மிகவும் நிம்மதியாகவும், ஆஸ்வாசமாகவும் இருக்கும் மிக முக்கியமான இடங்களில் கழிவறையும் ஒன்று. என்னதான் பார்த்து பார்த்து வீடு கட்டினாலும் அந்த கழிவறையைத்தான் காலை எழுந்தவுடன் பயன்படுத்தியாக வேண்டும். பிறகு தான் மற்றது எல்லாம்.
அப்படிப்பட்ட கழிவறைக்கு நாம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும். இன்று புதிய வீடு கட்டுபவர்களாக இருந்தாலும் சரி, அலுவலகங்களாக இருந்தாலும் சரி, மருத்துவமனைகள் தொடங்கி கல்வி நிறுவனங்கள் வரை அனைத்து இடங்களிலும் வேஸ்டேர்ன் டாய்லெட்டுகள்தான் பொருத்தப்படுகிறது. இது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் சிறந்ததா என கேட்டால் அது கிடையாது.
பொதுவாகவே மனிதர்களின் கழிவை வெளியேற்றும் இயற்கையான செயல்முறை என்பது கிழே முழங்கால்களை மடக்கி செரிமான பகுதியை அமர்த்தி உட்காருவதே ஆகும். அதற்கு ஏற்றார்போல்தான் இந்தியன் டாய்லெட்டுகள் வடிவமைக்கப்பட்டன. இதை சுத்தம் செய்வதும் மிகவும் எளிமையான ஒன்று. அது மட்டும் இன்றி, இந்த இந்தியன் டாய்லெட்டுகளில் நாம் அமரும்போது அதற்கும் நமது உடல் பாகத்திற்கும் இடைவெளி இருக்கும். இதனால் பாக்டீரியா தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்படாது. மேலும் இதில் தண்ணீர் செலவும் வெஸ்டேர்ன் டாய்லெட்டை விட மிகவும் குறைவு.
அதே நேரம் நாம் வெஸ்டேர்ன் டாய்லெட் பயன்படுத்தும்போது, டிஷ்யு பேப்பர் கோண்டு டாய்லெட்டை துடைத்துவிட்டு அமர வேண்டும். துடைத்தால் மட்டும் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகன்று விடுமா என்பது மறுபக்கம். மேலும், அதில் இருக்கையில் அமருவதுபோல் அமர்ந்து நாம் கழிவுகளை கழிக்கும்போது டாய்லெட்டில் உள்ள கிருமிகள் நமது உறுப்புகளில் புகுந்துகொள்ளவும், இதனால் இன்ஃபெக்ஷன் ஏற்படவும் அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன.
மேலும், திடக்கழிவை கழிக்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் உங்கள் உறுப்புகளில் சிதறலாம் அதுவும் தொற்று ஏற்பட காரணமாக அமையும். இந்த டாய்லெட்டை பயன்படுத்தும் நபர்கள் தங்கள் பிறப்புறுப்பு உள்ளிட்ட அந்த பகுதி முழுவதையும் சுத்தமாக அதற்காக விற்கப்படும் கிளீனிங் ஜெல் மூலம் கழுவி சுத்தம் செய்து பாதுகாக்க வேண்டும். மேலும், தண்ணீர் செலவும் இதில் மிகவும் அதிகம். பார்ப்பதற்கு மிகவும் லுக்காக இருக்கும் இந்த வெஸ்டேர்ன் டாய்லெட்டுகள் நம் வீடுகளில் இருக்கும் முதியவர்கள், முழங்கால்களை மடக்க முடியாத நோயாளிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தலாம்.
இந்த நிலையில் வீடுகளில் இரண்டு டாய்லெட்டுகள் இருந்தால் அதில் ஒன்றை இந்தியன் டாய்லெட்டாகவும் மற்றொன்றை வெஸ்டேர்ன் டாய்லெட்டாகவும் கட்டமையுங்கள். அது சிறந்ததாக இருக்கும். எது எப்படி ஆனாலும் சரி இந்தியன் டாய்லெட்டுகள்தான் சுகாதாரத்தில் சிறந்தது என மருத்துவர்கள் மற்றும் டாய்லெட் கட்டமைப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: நீல நிறமாக மாறிய உடல்:Vape-க்கு அடிமையான இளம் பெண்ணின் தந்தை கதறல்.! - Teens Lungs Collapses After Vaping