சென்னை: கொரியர்களின் கண்ணாடி போன்ற சருமத்தைப் பார்த்து அடடா என்ன ஷைனிங், என்ன பளபளப்பு என நினைக்காத நபர்கள் இருக்கவே முடியாது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் கொரியன் ஸ்கின்டோன் மீது அதீத ஆர்வம் வந்திருக்கிறது.
இதைத்தான் பல அழகு தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் மூலதனமாக மாற்றி பல்வேறு அழகு சாதன பொருட்களைச் சந்தை படுத்தி வருகிறது. அதை எத்தனை ஆயிரம் செலவானாலும் வாங்கி பயன்படுத்த வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். செலவே இல்லாமல் உங்கள் சருமம் மட்டும் இன்றி கூந்தலும் ஷைனியாகவும், ஆரோக்கியமாகவும் தோற்றம் அளிக்க நீங்கள் அரிசி கழுவிய தண்ணீரைப் பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தோல் பராமரிப்பு நிபுணர் மருத்துவர் மானசி ஷிரோலிகார், அரிசி கழுவிய தண்ணீர் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி சருமத்தையும், கூந்தலையும் பராமரிக்க உதவுவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அரிசி கழுவிய தண்ணீரைச் சருமத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது: அரிசி தண்ணீரை டோனராக பயன்படுத்துங்கள்: அரசி கழுவிய தண்ணீரில் சுத்தமான காட்டன் பஞ்சோ அல்லது துணியோ சுருட்டி போட்டு உற வைக்கவும். பிறகு உங்கள் முகத்தைச் சுத்தமாகக் கழுவி விட்டு அந்த காட்டனை எடுத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்துகொள்ளலாம்.
அரிசி தண்ணீரில் ஃபேஸ் மாஸ்க்: 2 ஸ்பூன் அரிசி மாவை எடுத்து அதில் அரிசி கழுவிய தண்ணீரைக் கலந்து பேஸ்ட் போல் தயாரித்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
அரிசி தண்ணீரைச் சருமத்தின் சுத்தப்படுத்தியாக பயன்படுத்தலாம்: அரிசி தண்ணீரை உங்கள் முகத்தில் நன்றாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான தண்ணீர் மூலம் முகத்தைக் கழுவலாம்.
அரிசி கழுவிய தண்ணீரைக் கூந்தலுக்கு எப்படிப் பயன்படுத்துவது: கூந்தலுக்கு கண்டிஷ்னராக பயன்படுத்தலாம்: முடிக்கு ஷாம்பு பயன்படுத்திக் கழுவிய பின்பு அரிசி தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் வைத்து விட்டு அலசிவிடுங்கள். இது உங்கள் முடிக்குச் சிறந்த ஆரோக்கியம் தரும்.
ஹேர் மாஸ்க்: நீங்கள் வீட்டில் தயாரிக்கும் கற்றாழை உள்ளிட்ட அனைத்து ஹேர் மாஸ்கிலும் அரிசி தண்ணீரைச் சேர்த்துப் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: முடி நீளமாக வளர இதுதான் பெஸ்ட்.. ட்ரை பண்ணி பாருங்க.! - Homemade Hair Tonic For Hair Growth