ETV Bharat / health

குறைந்து வரும் பார்வை திறன்... கண்புரை நோயாக இருக்கலாமா?: மருத்துவர் கூறுவது என்ன? - How to protect from cataracts

சர்க்கரை நோயாளிகளை அதிகளவில் தாக்கும் கண்புரை நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? கண்புரை நோய் என்றால் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கியுள்ளார் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின், மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி.

கண் தொடர்பான கோப்புப்படம்
கண் தொடர்பான கோப்புப்படம் (Credit: Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 7:59 PM IST

சென்னை: ஆண்டுதோறும் ஜூன் மாதம் கண்புரை விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்துப் பேசியுள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின், மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் சௌந்தரி, உலகளவில் கண்புரை நோயால் சுமார் 18 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளின் பார்வைத்திறன் இழப்பிற்கு கண்புரை நோய் முக்கிய காரணமாக இருக்கிறது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சௌந்தரி, மருத்துவர்
சௌந்தரி, மருத்துவர் (Credit: ETV Bharat Tamil Nadu)

மேலும் உலக அளவில் கண்புரைக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து அறுவை சிகிச்சைகளிலும் 20 சதவீதம் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செய்யப்படுகின்றன என தெரிவித்த மருத்துவர் சௌந்தரி, கண்களின் இயற்கையான லென்ஸ்கள் மீது மேக மூட்டம் போன்ற மங்கும் தோற்றம் ஏற்படும்போது கண்புரை நோய் வருகிறது எனவும், இது குறைந்து கொண்டு போகும் பார்வைத்திறனுக்கு வழிவகை செய்யும் எனவும் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், லென்ஸ்களில் புரதச்சிதைவின் காரணமாக, மங்கலான பார்வையும், நிறங்களை அடையாளம் காண்பதில் சிரமமும் மற்றும் இரவு நேரத்தில் சரியாக பார்வை தெரியாத நிலையும் ஏற்படும். வயது முதிர்ச்சியடையும்போது நமது கண்களின் லென்ஸ்களில் உள்ள புரதம் சிதைவுறத் தொடங்கும் எனவும், வயதான முதியவர்கள், அதுவும் குறிப்பாக 50 வயதை கடந்தவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள், குறித்த கால அளவுகளில் தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது.

மேலும், வயது முதிர்ச்சியின் காரணமாக, கண்புரை ஏற்படுவது மிகப்பொதுவானது என்ற போதிலும், புற ஊதாக்கதிர்கள், உடலில் நீர்ச்சத்து இழப்பு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, புகைபிடித்தல், கண்ணில் காயம், நீரிழிவு மற்றும் கதிர்வீச்சு சிகிச்சைகள் போன்ற மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றிற்கு வெளிப்படுதல் இருக்குமானால், எந்த வயதுப்பிரிவைச் சேர்ந்த நபருக்கும் கண்புரை பாதிப்பு ஏற்படலாம் எனவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத்தரத்தை கண்புரை நோய் பெரிதும் பாதிப்பதால், அதற்கு உரிய சிகிச்சை செய்துகொள்வது அவசியம் எனக்கூறியுள்ள மருத்துவர் சௌந்தரி, கண்புரைக்கு பயனளிக்கின்ற மற்றும் அதிகம் விரும்பப்படுகின்ற சிகிச்சையாக இருப்பது கண்புரை அறுவைசிகிச்சையே எனவும் இந்த அறுவை சிகிச்சை பொதுவாகவே மிகவும் பாதுகாப்பானது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி, இதனை செய்து கொள்ளலாம் எனவும் ஆரோக்கியமான, சமச்சீரான உணவுமுறையையும், உற்சாகமான, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவது மிக முக்கியம் எனவும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். கூடவே, மது அருந்துவதையும், புகை பிடிப்பதையும் கைவிடுவது போன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்கின்ற தெளிவான பார்வைத்திறன் மட்டும் இன்றி, அதிக காலம் நாம் உயிர் வாழ்வதற்கு வழிவகை செய்யும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், சூரியக்கதிர்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் மதிய நேரங்களில் வெளியே செல்லும்போது குளிர் கண்ணாடிகளை அணிவது நல்லது என தெரிவித்த மருத்துவர் சௌந்தரி, அழகான தோற்றத்தை வழங்குவதோடு, தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து நமது கண்களை பாதுகாப்பதற்கான ஒரு பாதுகாப்பு கேடயமாக அது உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜூன் மாதம் கண்புரை குறித்த விழிப்புணர்வு மாதமாக அணுசரிக்கப்படுவதால், சென்னையில் உள்ள அனைத்து அகர்வால்ஸ் மருத்துவமனையின் கிளைகளிலும் 50 வயதுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு வரும் 30-ஆம் தேதி வரை கண்புரை மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீல நிறமாக மாறிய உடல்:Vape-க்கு அடிமையான இளம் பெண்ணின் தந்தை கதறல்.! - Teens Lungs Collapses After Vaping

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.