ETV Bharat / health

சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட தர்பூசணி பழங்கள்: குடல் புற்றுநோய் எச்சரிக்கை.! - how to identify injected watermelon - HOW TO IDENTIFY INJECTED WATERMELON

கோடை வெயிலுக்கு தர்பூசணி பழங்கள் பொதுமக்களின் முக்கிய தேர்வாக உள்ள நிலையில் அதிலும் முறைகேடு செய்து லாபம் ஈட்டுகிறது ஒரு கூட்டம். இதனால் குடல் புற்றுநோய் கூட வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 4:25 PM IST

Updated : Apr 25, 2024, 5:15 PM IST

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மக்கள் நீராகாரம் மிக்க உணவுகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பலரும் கோடையில் கிடைக்கும் தர்பூசணி போன்ற பழங்களை அதிக அளவு விரும்பி வாங்கி உட்கொள்கின்றனர். ஆனால் அதிலும் கலப்படம் செய்து சிலர் பொதுமக்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.

அதாவது தர்பூசணி கொடியில் காய் வளரும்போதே Forchlorfenuron என்ற தாவர வளர்ச்சி ஊக்கிவிப்பானை சேர்க்கின்றனர். இதனால் தர்பூசணி பழத்தின் எடை அதிகரிப்பதுடன் விரைவாக பழுக்கவும் செய்யும் எனக்கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தர்பூசணி பழத்தை பறித்த பிறகு அதில் செயற்கை சுவையூட்டி மற்றும் நிறமூட்டியாக எரித்ரோசின் B ஊசி வழியாக செலுத்தப்படுகிறது எனவும் இதனால் பழம் நல்ல சிவந்த நிறத்தில் மிக இனிப்பாக இருக்கும் எனவும் சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியுள்ளார்.

இதுபோன்ற தர்பூசணி பழத்தை உட்கொள்வதால் என்ன நடக்கும்? நரம்பு தளர்ச்சி, தலைவலி உள்ளிட்டவற்றுடன் காலப்போக்கில் புற்று நோய் கூட வர அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தர்பூசணி பழம் சுவையூட்டி ஊசி செலுத்தப்பட்டதா? இல்லையா? என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

  • தர்பூசணி பழத்தை வாங்கி வந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து ஒரு பத்திரத்தின் உள் தண்ணீர் ஊற்றி அதில் போட்டு வையுங்கள். சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, அந்த தண்ணீரை பாருங்கள். அதில் சுவையூட்டி ஊசி செலுத்தப்பட்டிருந்தால் அந்த தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறி இருக்கும். இல்லை என்றால் அது நல்ல பழம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
  • தர்பூசணி அடர் பச்சையாக இருந்தும், பழத்தின் உள் பகுதி வெள்ளையாக இருந்தும் சுவை இனிப்பாக இருந்தால் அது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழம்.
  • தர்பூசணி பொதுவாக 7 முதல் 8 நாட்கள் வரை வெட்டாமல் வைத்திருந்தால் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் வாங்கி வந்த இரண்டு நாட்களிலேயே கெட்டு விட்டது என்றால் பழைய பழமாக இருக்கலாம் அல்லது சுவையூட்டி செலுத்தப்பட்ட பழமாகவும் இருக்கலாம்.

நல்ல தர்பூசணி பழம் எப்படி இருக்கும்?

  • பெரிதும் அல்லாமல் சிறுதும் அல்லாமல் இடைத்தரத்தில் இருக்கும் பழங்கள்தான் சுவையாக இருக்கும்
  • பழத்தின் தண்டு பகுதி மஞ்சள் நிறத்தில் வடி இருந்தால் அது மூத்து பழுத்த பழமாக இருக்கும்
  • பழத்தின் பச்சை நிறம் சிறிதாக மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருந்தால் அதும் மூத்து சுவையான பழமாக இருக்கும்

இது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சொல்வது என்ன? இந்த விஷயத்தில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பது அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாக இருக்கிறது. மேலும், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, தெருக்கடைகள் மற்றும் பெரும் கடைகள் என எதுவாக இருந்தாலும் தரமற்ற உணவுப் பொருள் மற்றும் கலப்படம் செய்த உணவுப் பொருள் விற்பனை செய்கிறார்கள் என்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், அவர்கள் பொருட்களை விற்பனை செய்ய உணவுப் பாதுகாப்புத்துறையின் அனுமதியும் பெற்றிருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற விஷயங்களில் நுகர்வோர் புகார் தெரிவிக்க வேண்டுமானால், 94440 42322 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவிக்கவும் இந்த எண்ணை 94440 42322 பயன்படுத்தலாம். மேலும், இவற்றை உட்கொண்டு உடல் ரீதியாக ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

இதையும் படிங்க: மாம்பழத்தை இப்படி சாப்பிட்டா கேன்சர் அபாயம்! எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி - How To Identify The Good Mango

Last Updated : Apr 25, 2024, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.