ETV Bharat / health

குண்டான குழந்தையின் பெற்றோரா நீங்கள்? யூனிசெஃப் சொல்லும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழி! - CHILDREN OBESITY UNICEF guidelines

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 1, 2024, 7:53 PM IST

Updated : Jun 3, 2024, 11:13 AM IST

Children Obesity UNICEF advise: “என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்று தான் விளங்கவில்லை” என புலம்பும் பெற்றோர்களுக்காக யுனிசெஃப் அமைப்பு கூறும் வழிகாட்டுதல்களை இத்தொகுப்பில் காணலாம்.

தாய் மற்றும் குழந்தை: கோப்புப்படம்
தாய் மற்றும் குழந்தை: கோப்புப்படம் (Credits - Getty image)

சென்னை: சர்வதேச அளவில் 124 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவிலும் உடல் பருமன் கொண்ட குழந்தைகளை பார்க்க முடிகிறது. அதிகமான எடை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

ஆகவே அதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் உடல் எடையை கவனத்தில் கொள்வது பெற்றோரின் கடமை. “நல்லா சாப்பிடு, சாப்பிடுனு சொல்லிட்டு, இப்போ எப்படி சாப்பிடாதே என்று சொல்ல முடியும்” என பெற்றோர்கள் குழம்பி இருப்பதையும் பார்க்க முடிகிறது. “என் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் அதை எப்படி கொண்டு வருவது என்று தான் விளங்கவில்லை” என புலம்பும் பெற்றோர்களுக்காக யுனிசெஃப் அமைப்பு (United Nations Children's Fund) வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பழி போடாதீர்கள்: அதிகப்படியான உணவு மட்டும் உடல் எடைக்கு காரணம் என பெற்றோர்கள் கருதுவது தவறு. மரபணு, குழந்தைகளின் நடத்தை, சுற்றுச்சூழல் போன்றவையும் உடல் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையலாம். பொதுவாகவே அதிக எடையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை இருக்கலாம். அவர்கள் பள்ளியிலும், வெளியிலும் பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.

ஆகவே அவர்களிடம் பேசும் போது, அவர்களை கிண்டல் செய்யாமல், அவர்கள் மீது பழி போடாமல் பேச வேண்டும். பெற்றோர்கள் தங்களை கேலி செய்வதையும், பழி போவதையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் குழந்தைகள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிடலாம். இது மட்டுமில்லாமல் குழந்தைகள் மன அழுத்தம், சலிப்பு, கவலையாக உணரும் போது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்ண வாய்ப்புள்ளது.

உத்தரவிடாதீர்கள்: பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை எனது கவலைகளை போக்கவும், எனது பிரச்சினைகளை சரி செய்யவும் எனக்காக என் பெற்றோர்கள் இருக்கிறார்கள் என குழந்தைகள் நினைக்க வேண்டும். அதற்கேற்றார் போல் பெற்றோர்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்போதும் உங்களது குழந்தைகளை இழிவுபடுத்தும் விதமாக பேசக்கூடாது. முக்கியமாக குழந்தைகள் முன்னிலையில், கணவனை மனைவியும், மனைவியை கணவனும் குறை கூறுவதையும், அவர்களது உடல் எடை குறித்து கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

அவர்களது உடல் எடை குறித்து கேலி செய்வதையும், அவர்கள் முன்னிலையில் வேறு சிலரை கேலி செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது போன்ற செயலால், குழந்தைகள் உங்களிடம் மனம் திறந்து பேசுவதை விரும்ப மாட்டார்கள். உங்கள் குழந்தை உங்களிடம் தனது உடல் எடையை நினைத்து கவலைப்படுவதாக தெரிவித்தால், அதனை கண்டுகொள்ளாமல் இருந்து விடாதீர்கள். அவர்களுக்கு ஆதரவாக பேசுங்கள்.

உங்கள் குழந்தையின் மனம் உடையும்படி பேசிவிடாதீர்கள். குழந்தையின் உடல் எடையை குறைக்க உதவுகிறேன் என்ற பெயரில், இனிமேல் இது மட்டும் தான் சாப்பிடனும். இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என உத்தரவிடாதீர்கள். அவர்கள் கூற வருவதை பொறுமையாக கேளுங்கள். நீ இதை தான் செய்ய வேண்டும் என கூறாமல் அவர்களிடம் பேசுங்கள்.

குழந்தையிடம் ஆரோக்கியமாக பேசுங்கள்: பெற்றோர்கள் குழந்தையிடம் பேசும் போது ஆரோக்கியமான உரையாடல்கள் பேச வேண்டும். எடுத்த எடுப்பில், அவர்களது உடல் எடையை பற்றி பேசாதீர்கள். “இன்னிக்கு கிளாஸ் எப்படி போச்சு? இன்னிக்கு ஸ்கூல்ல என்னென்ன பண்ணீங்க?” என்று உங்களது உரையாடலை தொடங்குங்கள். அஆரோக்கியமான உணவு முறை மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது சற்று கடினம் தான் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். மேலும், ஆரோக்கியமாக இருப்பதன் நன்மைகள் குறித்து அவர்களிடம் விளக்கி கூறுங்கள்.

ஒன்றாக உணவுண்ணுங்கள்: விடுமுறை நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து உணவு சமைத்து சாப்பிடுங்கள். என்ன சமைப்பது என்று கலந்துரையாடி உணவு தயார் செய்யுங்கள். இது ஆரோக்கியமான உணவுகள் பற்றி பேசுவதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். பழங்கள், காய்கறிகள் குழந்தைகள் எடுத்துக்கொள்வதை ஊக்கப்படுத்துங்கள்.

குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதியுங்கள்: குழந்தையின் நடத்தையும் உடல் எடைக்கு ஒரு காரணமாகும். அதாவது உணவிற்கேற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதும் உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆகவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடலாம். ஜாய்ஸ்டிக் விளையாடுவது, உட்கார்ந்து விளையாடுவது என்பது போல் இல்லாமல், ஓடி ஆடி விளையாட ஊக்கப்படுத்துங்கள். அவர்களுடன் நேரம் செலவிடுங்கள்.

நினைவில் கொள்ளுங்கள்: உங்கள் குழந்தையின் மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஆதரிப்பதற்கான சிறந்த வழி, எதுவாக இருந்தாலும், நீங்கள் அவர்களுக்காக இருக்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும்.

இதையும் படிங்க: குழந்தைகளை திட்டாமல், அடிக்காமல் நல்வழிப்படுத்த முடியுமா? UNICEF சொல்லும் அற்புத வழிகள்! - Gentle PARENTING TIPS

Last Updated : Jun 3, 2024, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.