சென்னை: கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில் வெப்ப அலையின் தாக்கம் இன்னும் மோசமாக உள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டில் இருந்தால் மட்டும் என்ன? குளு குளுவென்றா இருக்கப்போகிறது? அதவும் இல்லை. ஃபேன் போட்டால் அதில் இருந்து வரும் காற்றும் சூடாகத்தான் இருக்கிறது. ஏர் கூலர் போட்டாலும் அதே நிலைதான். சரி சூடு தாங்காமல் குளிக்கச் சென்றால் தண்ணீரோ கோதிக்கிறது.
குளிர்ந்த தண்ணீரை சூடாக்கி குளித்த காலம் போய், சூடான தண்ணீரை ஆற வைத்துக்குளிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பல வீடுகளில் AC இருக்காது. இருந்தாலும் அதை தொடர்ந்து பயன்படுத்துவதிலும் தயக்கம். என்னதான் செய்வது என தெரியாமல் பலரும் திகைத்து நிற்கும் சூழல். AC, ஏர் கூலர், ஃபேன் போன்ற எதுவும் இல்லாத காலகட்டத்தில் நம் மூன்னோர்கள் மேற்கொண்ட சில வழிகாட்டுதல்களை இங்கே பார்க்கலாம்.
வீட்டை குளிர்ச்சியாக வைக்க முன்னோர்கள் மேற்கொண்ட சில வழிகாட்டுதல்கள்.!
- வெட்டி வேரால் செய்யப்பட்ட பாய்களை வாங்கி ஜன்னல் மற்றும் கதவு பகுதிகளில் போடலாம். இந்த பாய்களில் நீங்கள் தண்ணீரை நனைத்து விடுவதன் மூலம் குளிர்ச்சியான சூழல் உருவாவதுடன் அதில் இருந்து வரும் மணமும் மிக அருமையாக இருக்கும். முடிந்தவரை குளிர்ந்த நீரை பயன்படுத்துங்கள்.
- வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்சிஜன் தரும் தாவரங்களை வளருங்கள்
- வீட்டின் மேல் பகுதியில் கூலில் ரூஃப் பெய்ண்ட் அல்லது வெள்ளை சுண்ணாம்பு அடிக்கலாம்
- வீட்டின் மேல் பகுதியில் தென்னை ஓலையை போட்டு விடலாம்
- ஐஸ் கட்டியை கொஞ்சம் தண்ணீரில் போட்டு தரையை நாள்தோறும் ஒருமுறை துடைத்துவிடலாம்
- வீட்டின் மாடியில் செடி, கொடிகளை வளர்க்கலாம்
- வீட்டின் வெளியே இடம் இருந்தால் வெப்ப மரத்தை வைத்து வளருங்கள்
- உடல் சூட்டை குறைக்க மண் பானை தண்ணீரை குடியுங்கள்
- வீட்டின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் மாட்டலாம். இதனால் சூடு வீட்டில்குள் கடத்தப்படுவது குறைவதுடன் மின்சாரமும் சேமிக்க முடயும்.
இதையும் படிங்க: கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டவரா நீங்கள்.. மருத்துவரின் அறிவுறுத்தல் உங்களுக்காக.! - Covishield Is Safe Or Not