ETV Bharat / health

இப்படியும் நடக்குமா? பெண்ணின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடியை அகற்றிய மருத்துவர்கள்..முடி உண்ணும் நோயை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

முடி உண்ணும் பழக்கத்தை கொண்ட பெண்ணின் வயிற்றில் இருந்து மாத்தூர் மருத்துவமனை மருத்துவர்கள், மூன்று கிலோ முடியை அகற்றியுள்ளனர்.

author img

By ETV Bharat Health Team

Published : 3 hours ago

அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் மற்றும் மருத்துவர்கள்
அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண் மற்றும் மருத்துவர்கள் (Credit - ETVBharat)

ஜோத்பூர் (ராஜஸ்தான்): மதுரதாஸ் மாத்தூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் வயிற்றில் இருந்து 3 கிலோ முடி அகற்றப்பட்டுள்ளது. மதுரதாஸை சேர்ந்த 28 வயது பெண் கடுமையான வயிற்று வலி காரணமான மாத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் பெண்ணின் வயிற்றில் கொத்து கொத்தாக முடி இருப்பதை எண்டோஸ்கோப்பி மூலம் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இந்நிலையில், பெண்ணிற்கு உடணடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், வயிற்றில் இருந்த முடியை அகற்றினர். அதே சமயம், 'அந்த பெண்ணுக்கு முடி உண்ணும் பழக்கம் இருந்ததும், பெண்ணின் தலையில் குறைவான முடிகள் மட்டுமே இருந்தது' என்கின்றனர் மருத்துவர்கள்.

மேலும், அப்பெண் பசியிண்மை, வாந்தி, சட்டென எடை குறைவது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டதாகவும், ஆனால் முழுமையான உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார் என்கின்றனர் மருத்துவர்கள். இந்நிலையில், முடியை சாப்பிட வேண்டிய அவசியம் என்ன? எதற்காக முடியை சாப்பிட்டார் என பல கேள்விகள் எழுந்த நிலையில், முடி உண்ணும் நோயை பற்றி விவரிக்கிறார் மருத்துவர் தினேஷ் தத் ஷர்மா.

முடி உண்ணும் நோயான ட்ரைக்கோபேஜியா பற்றி தெரியுமா?:

ட்ரைக்கோபேஜியா எனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முடி சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். நமது உடலுக்கு முடியை ஜீரணிக்கும் திறன் கிடையாது.இதனால், நோயாளிகள் சாப்பிடும் முடி இரைப்பையில் சேகரிக்க தொடங்குகிறது, இதன் காரணமாக உணவுக் குழாயில் ஒரு கொத்து முடி உருவாகிறது. இது தான் ட்ரைக்கோ பெசோர் (Trichobezoar) என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் பொதுவாக 15 முதல் 25 வயதுக்குட்பட்ட மனநலம் குன்றிய, பிறப்பில் இருந்து வித்தியாசமாக நடந்துகொள்ளும் பெண்களிடம் அதிகம் காணப்படுவதாக மருத்துவர் தினேஷ் தத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 1,000 இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..நிம்ஸ் மருத்துவமனை சாதனை!

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.