ETV Bharat / health

தீபாவளி கொண்டாடியாச்சா! அப்டினா உடல் உறுப்புகளை தூய்மை செய்வது அவசியம்! - POST DIWALI FOOD

தீபாவளிக்கு பிந்தைய உடல் நஞ்சை தூய்மைப்படுத்தும் உணவு முறைகள் எவை என்பது தெரிந்துகொள்வது அவசியமாகும்.

Cleanse Out The Toxins For A Healthy Post Diwali Reset
உடலை தூய்மையாக்கும் தீபாவளிக்குப் பிந்தைய வழிமுறைகள் எவை என்பதைப் பார்க்கலாம். (ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 2:31 PM IST

தீபாவளி கொண்டாட்டங்களின் பக்க விளைவுகளாக உணவுப் பழக்கம், தூக்கமின்மை மற்றும் மாசுபாடு ஆகியவை உள்ளன. காற்றுமாசு ஏற்படுத்தும் விளைவுகளைச் சரிசெய்ய சில ஆரோக்கிய குறிப்புகளை ஊட்டச்சத்து நிபுணரான இஷி கோஸ்லா நம்முடன் பகிர்ந்துள்ளார்.

அதிக அளவு தண்ணீர், பழச்சாறுகள் குடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதை சீராக எப்படி கையாள்வது என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உடலைத் தூய்மைப்படுத்துவது என்பது உடலில் இருந்து கழிவுகளை அகற்ற உதவுவதைக் குறிப்பதாகும். பல ஆண்டுகளாக நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த பாட்டி வைத்தியம் மற்றும் எளிய நல்ல உணவுப் பழக்கங்கள் முக்கியம் என்பதை சமீப கால நோய்த் தொற்றுகள் உணர்த்துகிறது

"சில நாள்களுக்கு தீவிர உணவுகள் அல்லது நச்சு நீக்கத் உணவுத் திட்டங்களை மேற்கொள்வதை விட, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவதே சிறந்தது" என்று ஊட்டச்சத்து நிபுணர் இஷி கோஸ்லா கூறுகிறார்.

"ஒரு நல்ல உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் முழுமையாக இருக்க வேண்டும். மேலும் உடலின் உள்ளுறுப்புகளைச் சுத்தம் செய்யவதற்குத் தேவையான வைட்டமின் சி, ஈ, தாமிரம், மெக்னீசியம், செலினியம் மற்றும் சிங்க் உள்ளிட்ட போதுமான ஆன்டி-ஆக்சிடண்ட்ஸ் நம் உணவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்கிறார் இஷி கோஸ்லா.

உடலின் நச்சை அகற்றும் எளிய முறைகளை நம்முடன் பகிர்ந்துள்ளார் இஷி கோஸ்லா. அதன்படி,

  • அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதை சமன் செய்ய வேண்டும்.
  • சூப்கள், ஸ்மூத்திகள் போன்ற திரவ உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • குடலுக்கு அவ்வப்போது ஓய்வளிப்பது நல்லது
  • ஒரு நாள் பழம் மற்றும் காய்கறி உணவை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்
  • மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
  • திருவிழா காலத்திற்குப் பிறகு, கலோரிகளைக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் பட்டினி கிடக்காதீர்கள்.

வளர்சிதை மாற்றத்தை மீட்டமைக்க உதவும் உணவுகள்:

  • எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீருடன் நாளைத் தொடங்குங்கள்.
  • பழச்சாறுகளைத் தவிர்த்து, காய்கறிச் சாறுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • பூசணி, தக்காளி, கேரட், பீட்ரூட் மற்றும் கீரை போன்ற பச்சை காய்கறிகறி சூப் அல்லது ஜூஸ்களைப் பருகலாம்.
  • பாதாம் பால் மற்றும் தேங்காய் பால் சார்ந்த ஸ்மூத்திகள்
  • பழங்களில் கொய்யா மற்றும் பப்பாளிக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்
  • துளசி மற்றும் சியா விதைகள் குடல் சார்ந்த சிறு பிரச்னைகளை சரிசெய்ய உதவும்
  • சிக்கன் அல்லது ப்ரோக்கோலி சூப் உங்கள் உடலுக்கு சிறந்ததாக இருக்கும்
  • ஓட்ஸ், நெல்லிக்காய், கற்றாழை, தயிர், பூண்டு, காளான்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள் நல்ல தேர்வாகும்.

உலவும் கட்டுக்கதைகள்:

  • நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரகத்தை திறம்பட செயல்பட உதவுகிறது எனவும் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், போதுமான அளவு சிறுநீரை உருவாக்க 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் போதுமானது.
  • மலச்சிக்கலைப் போக்க வேண்டும் என அதுசார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது எதிர்மறையான விளைவைத் தரும் என்பதை மறந்துவிட வேண்டாம்.
  • இனிமாக்களைப் பயன்படுத்துவதிலும் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றால், இதுபோன்ற நேர்மறையான விளைவுகளைத் தரும்.

மனதில் கொள்ள வேண்டியவை:

  • உடலுக்கு அதிகளவு தூக்கமும், நல்ல ஓய்வும் அவசியம்
  • பயணங்களின் போது நீரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால், நீர்சத்துள்ள உணவை இதுபோன்ற சமயங்களில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • செரிமான அமைப்பு வழக்கமான உடல் செயல்பாடுகளால் பயனடைகிறது. இதனால், தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

வயதாகும்போது குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் அளவு குறைகிறது. இதனால், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமடைகிறது. எனவே வயதானவர்கள் மேற்கூறப்பட்ட வழிமுறைகளை மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றூவது நல்லதாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.