ETV Bharat / health

நீரிழிவு முதல் உடல் எடை குறைப்பு வரை மேஜிக் செய்யும் பாப்கார்ன்..நம்பி சாப்பிடலாம்! - Popcorn Benefits - POPCORN BENEFITS

Popcorn Benefits: அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடும் பாப்கார்ன் ஆற்றலை அதிகரித்து உடல் எடையை குறைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? தெரிந்து கொள்ளுங்கள் இந்த செய்தி தொகுப்பில்..

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credit - Getty Images)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 12, 2024, 12:03 PM IST

ஹைதராபாத்: பாப்கார்ன் (Popcorn) என்றாலே நினைவுக்கு வருவது திரையரங்கம் தான். அங்குச் செல்லும் போது தான் பலரும் பார்கார்னை ருசித்திருப்போம். பொதுவாகவே, நொறுக்குத் தீனிகளில் கிடைக்கும் நன்மைகள் மிகவும் குறைவு என்றாலும் ஜாலியாக சாப்பிடும் பாப்கார்ன் ஆரோக்கியமான ஸ்நாக் ஐட்டம் என்கிறார் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சுபாங்கி தம்மாழ்வார்!

பல நேரங்களில் நேரத்தை கடத்துவதற்காக நாம் உண்ணும் பாப்கார்னில் கலோரிகள் மிகவும் குறைவு எனவும் கொலஸ்ட்ரால் பயம் இல்லை என்கிறது தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வறிக்கை. மேலும், இதில் நார்ச்சத்துடன் பொட்டாசியம், இரும்புச்சத்து உள்ளடக்கியுள்ளதால் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இது ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்கிறார் மருத்துவர் சுபாங்கி தம்மாழ்வார்.

"ஆரோக்கியமான தின்பண்டங்களில் பாப்கார்னை சேர்க்கலாம். ஆனால், சீஸ், பட்டர், சால்டட் பாப்கார்னுக்கு பதிலாக, ப்ளைன் பாப்கார்னை தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது அதிக பலன் கிடைக்கிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பாப்கார்னில் பெரும்பாலும் கலோரிகள் குறைவு. காலையில் கூட ஸ்நாக்ஸாக இதை எடுத்துக்கொள்ளலாம்" - டாக்டர் சுபாங்கி தம்மாழ்வார்

பாப்கார்னில் இருக்கும் சத்துக்கள்:

  • வைட்டமின் பி
  • மாங்கனீசு
  • நார்ச்சத்து
  • பாலிபீனாலிக் கூறுகள்
  • மெக்னீசியம்
  • நார்ச்சத்து

பாப்கார்னில் சுவையும், சத்தும் இருக்கிறது என்பதற்காக தற்போது மார்கெட்டில் கிடைக்கும் பல வகையான பாப்கார்ன் பாக்கெட்டுகள் வாங்கி சாப்பிடக்கூடாது. பாப்கார்னின் சத்தும் சுவையும் குறையாமல் கிடைப்பதற்கு வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது: இதில் உள்ள வைட்டமின்கள் இன்சுலின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, சர்க்கரை நோயாளிகள் இவற்றைச் சாப்பிட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்கிறார் டாக்டர் சுபாங்கி. பாப்கார்னில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைத்து, கெட்ட கொலஸ்ட்ராலையும் கரைக்கும்.

உங்களுக்குத் தெரியுமா?...ஒரு கிண்ணம் பாப்கார்ன் வெறும் 30 கலோரிகளை மட்டுமே அடக்கியுள்ளது. இது, ஒரு சிறிய பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கும் குறைவு

வேகமாக ஆற்றல் பெறுங்கள்: பதப்படுத்தப்படாத உணவு வகைகளில் ஒன்று பாப்கார்ன். குறிப்பாக, இது 100% இயற்கை தானியமாகும். வீட்டு வேலைகளை செய்துவிட்டு சோர்வாக இருக்கும் போது இதை சாப்பிட்டால் விரைவான ஆற்றல் கிடைக்கும். பழச்சாறுகளை விட இதில் அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட சலிப்பு ஏற்பட்டால்..பாப்கார்ன் சாப்பிடலாம் என்கிறார் மருத்துவர்.

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.