சென்னை: பெருங்குடல் சார்ந்த மேம்பட்ட சிகிச்சை பராமரிப்பு துறையில் முன்னோடியான அப்போலோ மருத்துவமனை, புதுமையான மருத்துவ முன்னெடுப்புகள் அறிமுகத்தின் மூலமாக பெருங்குடல் அறுவைசிகிச்சை தளத்தையே மாற்றியமைத்துள்ளது.
அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்கும் 5வது கருத்தரங்கம் சென்னை அப்போலோ புரோட்டான் கேன்சர் சென்டரில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. இதை அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் டாக்டர் பிரீத்தா ரெட்டி தொடங்கி வைத்தார்.
ரோபோடிக்லிருந்து திறந்தநிலை மாற்று நிலை விகிதம் கணிசமாக ஏஆர்சியில் குறைந்து 1 சதவீதமாக இருக்கிறது. இதுவே உலகளவில் 7.0 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பான சிகிச்சை விளைவுகள், மேம்படுத்தப்பட்ட உயிர்பிழைப்பு விகிதங்களுக்கும் மற்றும் சிகிச்சை நெறிமுறைகளில் கணிசமான முன்னேற்றங்களுக்கும் வழிவகுத்திருக்கிறது.
பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புள்ள நபர்களுக்கு நீண்டகால உயிர்பிழைப்பு விகிதம் என்ற உயர் செயல் திறனுக்கான இது பங்களிப்பை செய்திருக்கிறது. அப்போலோ மருத்துவமனையின், பெருங்குடல் அறுவைசிகிச்சை மையத்தின் கிளினிக்கல் லீட் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறும்போது,"5வது அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவைசிகிச்சை கருத்தரங்கத்தினால், பெருங்குடல் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி ஏற்படும்.
குறைந்த விலையில் சிகிச்சை: பெருங்குடல் புற்றுநோய்க்கான உலகின் மிகவும் செலவு குறைந்த ரோபோடிக் அறுவைசிகிச்சை திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.சராசரியாக, மேற்கத்திய நாடுகளில் இதேபோன்ற மருத்துவ செயல்முறைக்காகும் செலவில் 4-ல் 1 பங்கு செலவில் அதே உயர்தர சிகிச்சையை நாங்கள் வழங்குகிறோம்" என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, அமெரிக்காவின் கிளீவ்லேண்ட் கிளினிக் புளோரிடாவில் உள்ள பெருங்குடல் அறுவைசிகிச்சைத் துறையின் தலைவரும், செரிமான நோய் மையத்தின் இயக்குநருமான ஸ்டீவன் டி வெக்ஸ்னர் கருத்தரங்கில் பேசும்போது,"வட அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள உலகின் முன்னணி மூன்று துறைகளில் பெருங்குடல் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கான வாய்ப்பு தனித்துவமானது.
கல்விசார் செறிவூட்டல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அனைத்தும் நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க உலகளவில் பயன்படுத்தப்படும்" என்றார். அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் லிமிடெட் செயலாக்க துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசும்போது, "அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவைசிகிச்சை கருத்தரங்கு, உலகின் தலைசிறந்த நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பெருங்குடல் அறுவைசிகிச்சை மருத்துவர்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கும் ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும்.
இளம் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு இது ஒரு நிலை மாற்றத்தை உருவாக்கும் சிறந்த கற்றல் அனுபவமாகும். ஏஆர்சி திட்டம், தொடர்ந்து விதிவிலக்கான மருத்துவ விளைவுகளை அளித்து, பல முக்கியமான பகுதிகளில் உலகளாவிய அளவுகோல்களை விஞ்சியிருக்கிறது.
இந்த சாதனைகளை அப்போலோ சர்வதேச பெருங்குடல் அறுவை சிகிச்சை கருத்தரங்கில் பெருமிதத்துடன் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது, சுகாதார பராமரிப்பை மேலும் மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் "என்றார்.
அறுவைசிகிச்சையின் துல்லியத்தையும், நோயாளிகளுக்கான சிகிச்சை விளைவுகளையும் மேம்படுத்தவும் மற்றும் சிகிச்சை பராமரிப்பு செயல்முறைகளை நெறிப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போலோ புரோட்டான் கேன்சரின் ஏஆர்சி செயல்திட்டம் பெருங்குடல் புற்றுநோய் அறுவைசிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்கியிருக்கிறது.
உலகளாவிய தரநிலை அளவான 5.2 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் கீழ்ப்புற அகற்றல் முறை விளிம்பு பாசிட்டிவிட்டி விகிதம் 4.6 சதவீதமாக ஏஆர்சியில் இருக்கிறது. இணைப்புக் கசிவு விகிதம் உலக தரநிலையான 2.6 சதவீதத்திற்கு பதிலாக 0.9 சதவீதமாகவும், காயத்தில் தொற்று விகிதம் 5.2 சதவீதத்திற்கு எதிராக 1.4 சதவீதமாகவும் மற்றும் சிகிச்சைக்கு மீண்டும் அனுமதிக்கப்படும் விகிதம் உலக அளவான 21.4 சதவீதத்திற்கு எதிராக 1.9 சதவீதமாகவும் அப்போலோவின் ஏஆர்சியில் பதிவாகியிருக்கிறது.
இதையும் படிங்க: குழந்தைகளிடம் மறந்தும் கொடுக்கக்கூடாத பொருட்கள்.. எச்சரிக்கும் குழந்தைகள் நல மருத்துவர் சாத்தப்பன்