ETV Bharat / entertainment

'கண்ணாடி வளையலில் தன்னே நன்னானே'..தங்கலான் அறுவடை பாடல் வெளியானது! - aruvadai paadal out now

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:47 PM IST

Thangalaan : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் இருந்து அறுவடை பாடல் வெளியாகி உள்ளது.

அறுவடை பாடல் போஸ்டர்கள்
அறுவடை பாடல் போஸ்டர்கள் (Credits - Studio Green X Page)

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 1900ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆக 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் படத்திலிருந்து அறுவடை பாடலை (முழு வீடியோ) படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலின் வரிகளை உமா தேவா எழுதி உள்ளார். இப்பாடலை நடிகர் விக்ரம், சிந்தூரி விஷால், மதிச்சியம் பாலா, சுகநிதி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா 'தங்கலான்'? பயமுறுத்துமா 'டிமாண்டி காலனி 2'?... சுதந்திர தினத்தன்று வெளியாகும் படங்கள் ஒரு பார்வை! - Independence day movie releases

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.