ETV Bharat / entertainment

பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை தவிடு பொடியாக்கும் 'கோட்'.. 3வது நாள் வசூல் நிலவரம் என்ன? - GOAT box office collections

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 4:30 PM IST

GOAT box office collections day 3: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான 'கோட்' திரைப்படம், இதுவரை இந்திய அளவில் 84.4 கோடி வசூல் செய்துள்ளது

கோட் போஸ்டர்
கோட் போஸ்டர் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் 'கோட்' (Greatest Of all time). யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தில் பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கோட் திரைப்படம் விஜய் திரை வாழ்வில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். கோட் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அதே நேரத்தில் படத்தில் வில்லன் விஜய் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த கேரக்டரை வடிவமைத்ததற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். கோட் படத்தில் நட்சத்திரங்களின் கேமியோ ஒர்க் அவுட் ஆனாலும் படத்தின் நீளம் காரணமாக இரண்டாம் பாதி எதிர்பார்த்த அளவு இல்லை என ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர். ஆனால் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் கோட் திரைப்படம் 126 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்தியா முழுவதும் சேர்த்து, 46 கோடியும், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 38 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கோட் படத்தின் இரண்டாவது நாள் வசூல் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. கோட் திரைப்படம், இந்தியா முழுவதும் 25.5 கோடியும், தமிழ்நாட்டில் 22.75 கோடியும் வசூல் செய்துள்ளது.

இரண்டாவது நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 1.7 கோடியும், கேரளாவில் 1.5 கோடியும் வசூல் செய்துள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டில் 61.9 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தமாக கோட் படம் வெளியாகி இன்று (செப் 7) காலை வரை இந்திய அளவில் 84.4 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் இரண்டாவது நாளும் 100 கோடிக்கு மேல் வசூல் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் கோலி சோடா வெப் சீரியஸ்; ரிலீஸ் தேதி அறிவிப்பு! - goli soda rising web series

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.