ETV Bharat / entertainment

10 ஆயிரம் திரைகள்.. 40 ஆயிரம் காட்சிகள்.. சீனாவில் ரிலீசாகும் 'மகாராஜா' திரைப்படம்! - MAHARAJA RELEASE IN CHINA

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற மகாராஜா திரைப்படம் சீனாவில் சுமார் 10 ஆயிரம் திரைகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மகாராஜா திரைப்படம் போஸ்டர்
மகாராஜா திரைப்படம் போஸ்டர் (Vijay Sethupathi X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 3:54 PM IST

சென்னை: நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்ரமணியம் ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் மகாராஜா (Maharaja). இப்படத்தினை பேஷன் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி, தமிழ் மற்றுமின்றி பல்வேறு மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் மகாராஜா படத்தை Yi Shi Films நிறுவனம் Alibaba Pictures உடன் இணைந்து சீனா முழுதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது. சீனா வெளியீட்டில், Home Screen Entertainment மற்றும் Nine Knots Entertainment மிக முக்கிய பங்காற்றி, இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளன.

இதுகுறித்து, அலெக்ஸி வூ, Yi Shi Films கூறியதாவது, "மகாராஜாவை சீனாவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இப்படம் மூலம் சீனாவில் தமிழ் சினிமாவின் கலைத்திறனை, புதிய பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. அலிபாபா பிக்சர்ஸ் உடன் இணைந்து, உலகின் சிறந்த சினிமாக்களை உலகம் முழுக்கவுள்ள பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சி" என்றார்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறுகையில், "மகாராஜா எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியான படைப்பாகவும், பெருமையின் அடையாளமாக மாறியது. சிறந்த கதையம்சம் கொண்ட நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை, பல்வேறு பின்னணியில் உள்ள பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படங்களை, உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும். அந்த வகையில், மகாராஜா பெரும் அன்பையும், வரவேற்பையும் பெற்றது."

இதையும் படிங்க: 'சூது கவ்வும் 2' அப்டேட் வந்தாச்சு.. ரிலீஸ் எப்போது?

"தற்போது இப்படம் சீனாவில் உள்ள ரசிகர்களைக் கவரும் வகையில், நவம்பர் 29ஆம் தேதி வெளியாவது மகிழ்ச்சி. மகாராஜா படத்தினை சீனாவில் மிகப்பெரிய அளவில் வெளிடுயிடும் Yi Shi Films மற்றும் Alibaba Pictures நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்றி. உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்களுடன் இப்படம் சீனா ரசிகர்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். சீன ரசிகர்களது வரவேற்பைக் காண ஆவலுடன் உள்ளோம். இந்த நேரத்தில் இப்படத்தில் அற்புதமான நடிப்பை வழங்கிய விஜய் சேதுபதி, இயக்குநர் நித்திலன் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

தற்போது, நவம்பர் 29ஆம் தேதி சீனா முழுவதும் சுமார் 10 ஆயிரம் திரைகளில் 40 ஆயிரம் காட்சிகள் திரையிடப்படவுள்ளது. சீனாவிலும் மகாராஜா திரைப்படம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.