ETV Bharat / entertainment

பிரதீப் ரங்கநாதன் பர்த்டே கிப்ட்.. வெளியானது விக்னேஷ் சிவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... புதிய டைட்டில் என்ன? - Love Insurance kompany first look - LOVE INSURANCE KOMPANY FIRST LOOK

Love Insurance kompany first look: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் 'love insurance kompany'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக்
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் (Credits - @7screenstudio X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 2:13 PM IST

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் 'love insurance kompany'படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி, முக்கிய கதாபாத்திரங்களில் எஸ்.ஜே.சூர்யா, நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இப்படத்திற்கு 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என தலைப்பிடப்பட்டது. ஆனால் LIC நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தலைப்பு உள்ளதாகவும், தலைப்பை மாற்றாவிட்டால் வழக்கு தொடருவோம் என படக்குழுவிற்கு எச்சரிக்கை விடுத்தது. இதனைத்தொடர்ந்து படத்தின் தலைப்பு 'love insurance kompany'என மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இன்று நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த அவரது முதல் படமான 'லவ் டுடே' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத்தொடர்ந்து அவர் இளைஞர்களின் மனம் கவர்ந்த இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ளதால் 'love insurance kompany' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்றைய இளம் தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது. love insurance kompany படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளராக பிரதீப் ஈ. ராகவ் பணியாற்றியுள்ளார். முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' பட வெற்றிக்கு பிறகு இப்படத்தை இயக்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. LIK என கூறப்படும் 'love insurance kompany'படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த வருட இறுதிக்குள் வெளியாகும் என தெரிகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: கல்வி மட்டுமே மனிதனை மதிக்க சொல்லிக்கொடுக்கும்.. அப்பா தொடங்கியதை அகரம் கையில் எடுத்துள்ளது: நடிகர் கார்த்தி - agaram foundation

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.