சென்னை: லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடைசியாக அசர்பைஜான் நாட்டில் ஒரு ஷெட்யூலை முடித்து படக்குழு நாடு திரும்பியது.
விடாமுயற்சி எப்போது வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், விடாமுயற்சி அப்டேட்களை படக்குழு கடந்த ஜூன் மாதம் முதல் வெளியிட்டு வருகிறது. அஜித்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, கடைசியாக அஜித்குமார் மற்றும் த்ரிஷா ஜோடியாக இருக்கும் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் குமார் மற்றும் ஆரவ்விற்கு விபத்து ஏற்பட்ட வீடியோவை அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
Celebrating 32 years of Ajith Kumar! 🎉 A journey forged through trials, tribulations, and triumphs. 💪 His perseverance is the ultimate symbol of enduring success! 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/22WOotIpSZ
— Lyca Productions (@LycaProductions) August 3, 2024
ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வழங்கி வரும் விடாமுயற்சி படக்குழு, இன்று நடிகர் அஜித்குமார் சினிமாவில் நடிக்க தொடங்கி 32 வருடங்கள் ஆனதை கொண்டாடும் வகையில் சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அஜித்தின் செய்தித் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள பிளாக் & ஒயிட் போஸ்டரில் அஜித், ரத்தக் கறையுடன் உள்ளார்.
மேலும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டரில், "32 ஆண்டுகள் தீரா சாதனைகளும், ஆறா ரணங்களும்... யாவையும் எதிர்கொண்டு வெல்லும் விடாமுயற்சி" என கூறப்பட்டுள்ளது. அஜித் சினிமாவில் நுழைந்து 32 ஆண்டுகளை கொண்டாடி வரும் அஜித் ரசிகர்கள், விடாமுயற்சி படக்குழு வெளியிட்டுள்ள ஸ்பெஷல் அப்டேட்டால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: "ஒரு நாவலை படித்தது போன்ற அனுபவம்"... ரஜினிகாந்தைச் சந்தித்த மகாராஜா இயக்குநர் நெகிழ்ச்சி! - Rajini praised Nithilan Swaminathan