சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கவின். இவர் சின்னத்திரையில் இருந்து வந்த மற்றுமொரு நடிகர். லிஃப்ட், டாடா, ஸ்டார் என அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர். இவரது நடிப்பில் ஸ்டார் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், தமிழ் சினிமாவில் காக்கா முட்டை, விசாரணை, கொடி, வட சென்னை உட்பட பல வெற்றிப் படங்களை தயாரித்தவர் இயக்குநர் வெற்றி மாறன். இந்நிலையில், இவரது கிராஸ் ரூட் ஃப்லிம் கம்பெனியும், பிளாக் மெட்ராஸ் ஃஃப்லிம்ஸ் கம்பெனியும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் மாஸ்க். இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி.சொக்கலிங்கம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக சிறந்த குறும்படம் கோல்ட் மெடல் விருது பெற்றுள்ளார். இத்திரைப்படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், VJ அர்ச்சனா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பாளராக ராமர், கலை இயக்குநராக ஜாக்கியும், ஆடை வடிவமைப்பாளர்களாக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் இறுதியில் சென்னையில் துவங்குகிறது.
இதையும் படிங்க: விஜய்சேதுபதியின் 'ஏஸ்' பட டைட்டில் டீசர் வெளியானது! - Vijay Sethupathi Ace Movie