ETV Bharat / entertainment

வரலட்சுமி-நிக்கோலாய் திருமண கொண்டாட்டம்... ஒன்று கூடும் திரை, அரசியல் பிரபலங்கள்! - Varalaxmi Marriage - VARALAXMI MARRIAGE

Varalaxmi Marriage: நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், அதில் நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வரலட்சுமி திருமணக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள்
நடிகை வரலட்சுமி திருமணக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் (CREDIT - VARALAXMI X PAGE)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 5:40 PM IST

சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார். 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கரம்பிடிக்க உள்ளார்.

நாளை (ஜூலை 3) அவரது திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது ஜோராக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அவரின் மெஹந்தி விசேஷம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

இருவீட்டார் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரலட்சுமியின் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், நடிகை ராதிகா மற்றும் சரத்குமார், மாரி திரைப்படத்தின் 'ரவுடி பேபி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

இந்தப் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் வரலட்சுமி சரத்குமாருக்கு வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர். வரலட்சுமி - நிக்கோலாய் ஜோடியின் திருமணத்தைத் தொடர்ந்து பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் திரையுலகம் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பாகவே வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் இணையத்தில் வலம் வர ஆரம்பித்தன. காரணம் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களுக்கு சரத்குமார் தனது குடும்பத்துடன் நேரில் சென்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழை கொடுத்திருக்கிறார். திரையுலகப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சரத்குமார் தனது குடும்பத்துடன் டெல்லி சென்று தனது மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அழைப்பிதழை பிரதமர் மோடிக்கு கொடுத்துள்ளார். இதனை வரலட்சுமி சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'பிரதமரை நேரில் சென்று பார்ப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு' என்று குறிப்பிட்டிருந்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், புஷ்பா புகழ் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோருக்கு் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுத்த புகைப்படங்களை வரலட்சுமி இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தளபதி 69; விஜய்க்கு ஜோடியாகிறாரா நடிகை சமந்தா? - Vijay Samantha

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.