சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' (Vaazhai) திரைப்படத்தின் முதல் பாடல் (தென்கிழக்கு பாடல்) வெளியீட்டு விழா, நேற்று (வியாழன் கிழமை) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகர் கலையரசன், நடிகை நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய மாரி செல்வராஜ், "பரியேறும் பெருமாள் திரைப்படம் தான் எனது வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுத்த படம். முதலில் வாழை திரைப்படத்தை தான் எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதுவும் மிகவும் சிறிய பட்ஜெட்டில் பண்ண வேண்டும் என நினைத்தேன். ஆனால், வாழ்க்கையோடு ஒப்பிடும் போது வாழை திரைப்படத்தைக் காத்திருந்து எடுக்க வேண்டும் என நினைத்தேன்.
Only a few more hours left for #Vaazhai 's #Thenkizhakku to reach your playlists! ❤️✨🌸
— Mari Selvaraj (@mari_selvaraj) July 18, 2024
First Single @5PM Today!!
@Music_Santhosh @talktodhee #Yugabharathi ❤️✨@navvistudios@disneyplusHSTam@RedGiantMovies_ @thinkmusicindia @Fmpp_Films pic.twitter.com/RTPFyyqTFM
அதனைத் தொடர்ந்து, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய திரைப்படங்களை எடுத்தேன். ஆனால், வாழை திரைப்படத்தின் கதை என் மனதை அழுத்திக் கொண்டே இருந்தது. மாமன்னன் படப்பிடிப்பில் இருந்த போது, வாழை கதையை கேட்டவுடனே ஹாட்ஸ்டார் சம்மதம் தெரிவித்துவிட்டனர். மாமன்னன் வெளியீட்டுக்கு முன்னரே இப்படத்தை எடுத்து முடித்து விட்டோம்.
மேடையில் நான் தண்ணீர் குடிக்காமல் பேசினால் நிறைய உண்மைகளை உளறி விடுவேன். பிறகு தான் எனக்கே தெரியும் இவ்வளவு உண்மைகள் என் மனதிலிருந்தது என்று. அது சர்ச்சையாகவும் மாறியுள்ளது. ஏனென்றால், ஒரு கதையை படமாக்குவது என்றால் பதற்றம் இருக்காது. ஆனால் என்னை நானே இயக்குவது என்பதால் தான் இந்த பதற்றம் போகமாட்டுது.
இந்த திரைப்படத்தில் என்னுடைய அக்கா மகன், மாமா மகன் தான் சிறுவர்களாக நடித்துள்ளார்கள். இளைஞர்கள் வாழ்க்கை எப்படி போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். இந்த சிறிய பசங்க மூலம் இளைஞர்களுக்கு ஏதேனும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்று கூட என்னுடைய நடைமுறைகளை என்னுடைய இயக்குநர் கண்காணித்து தான் வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'பாதகத்தி' பாடல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. இப்பாடல் எப்படி உருவானது என எனக்கே தெரியவில்லை.
நான் சிறிய வயதில் பட்ட கஷ்டங்களை இந்த திரைப்படத்தில் நடிக்கும் சிறுவர்களும் அனுபவிக்க வேண்டும். அப்பொழுதுதான் கஷ்டங்கள் பற்றி சிறுவர்களுக்கு புரியும், அந்த உழைப்புதான் அவர்களை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லும். நான் முதலில் பார்த்த படம் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. என்னுடைய மனைவி, என் மனைவியோடு அம்மா சினிமாவை நேசிப்பார்கள், அதனால் திரைப்படம் இயக்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை.
என்னுடைய கஷ்டங்களை வைத்து எடுத்துள்ள படம் வாழை. என் வாழ்க்கையில் இருந்து மீள முடியாத துயரம் தான் வாழை திரைப்படம். என்னைக் குறை சொல்லுபவர்கள் என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் வேண்டும் என எடுத்த படம் தான் வாழை. வாழை திரைப்படம் ஆகஸ்ட் 23 வெளியாக உள்ளது. உழைப்பை செலுத்தினால் யாராக இருந்தாலும் முன்னேற முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எஞ்சாயி என்ஜாமி பாடலால் அறிவு பல பிரச்னைகளைச் சந்தித்தார்.. மனம் திறந்த பா.ரஞ்சித்!