ETV Bharat / entertainment

ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டும் விஜய்.. சென்சார் குழு வெளியிட்ட ’கோட்’ விமர்சனம் என்ன? - GOAT Review - GOAT REVIEW

GOAT movie first Review: கோட் திரைப்படம் வரும் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இங்கிலாந்து சென்சார் குழு கோட் படம் குறித்து தங்களது விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

கோட் போஸ்டர்
கோட் போஸ்டர் (Credits - @Ags_production X page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 31, 2024, 7:16 PM IST

சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மோகன், பிரசாந்த், சினேகா, பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் (Greatest of all time) திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. கோட் படத்திற்கு விண்ணை முட்டும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், பாடல்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

விசில் போடு, சின்ன சின்ன கண்கள் பாடல்கள் ஓரளவு வரவேற்பைப் பெற்ற நிலையில், ஸ்பார்க் பாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என ரசிகர்கள் விமர்சித்தனர். மேலும், கோட் படத்தின் பயன்படுத்தப்பட்ட AI தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட கோட் திரைப்படம் வேகமான திரைக்கதையுடன் இருக்கும் எனவும், படத்தில் பல்வேறு சர்ப்ரைஸ் உள்ளதாகவும் வெங்கட் பிரபு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூறி வருகிறார்.

இந்நிலையில், இன்று கோட் படத்தின் 4வது சிங்கிள் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் த்ரிஷா நடனமாடியுள்ளதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் கோட் வெளியாகவுள்ள நிலையில், இங்கிலாந்து சென்சார் குழு படத்தின் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

கோட் படத்தைப் பார்த்த இங்கிலாந்து சென்சார் குழு, இப்படத்தை 15 வயதுக்கு மேற்பட்டோர் பார்க்கலாம் எனவும், அதிக ஆக்‌ஷன் காட்சிகளுடன், ரத்தம் நிறைந்த சண்டைக் காட்சிகளும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் இப்படம் பெரும் வெற்றியைப் பெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கோட் திரைப்படத்தின் முன்பதிவில் உலகளவில் இதுவரை 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று இரவு அனைத்து திரையரங்குகளிலும் கோட் படத்தின் முன்பதிவு தொடங்கும் என தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விஜய்யின் கலக்கல் ஆட்டத்தில் வெளியானது கோட் படத்தின் ‘மட்ட’ பாடல்! - GOAT Matta song

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.