ETV Bharat / entertainment

முதன்முறையாக சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வீடியோ: சாதனையைப் படைத்தது இயக்குநர் பார்த்திபனின் டீன்ஸ்!..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 6:08 PM IST

Teenz movie by parthiban: முதன் முதலாக சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் என்ற சாதனையைப் படைத்துள்ளது இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் டீன்ஸ் திரைப்படம்.

சாதனையை படைத்தது இயக்குநர் பார்த்திபனின் டீன்ஸ்
முதன்முறையாக சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வீடியோ
முதன்முறையாக சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் வீடியோ: சாதனையைப் படைத்தது இயக்குநர் பார்த்திபனின் டீன்ஸ்!..

சென்னை: பயாஸ்கோப் ட்ரீம்ஸ் & அகிரா புரொடக்சன்ஸ் தயாரித்து இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகும் படம் டீன்ஸ். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைந்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ சென்சார் செய்யப்பட்டு இன்று (ஜன.24) வெளியிடப்பட்டது. இதனை அடுத்து, முதல்முதலாக சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பர்ஸ்ட் லுக் என்ற சாதனையை டீன்ஸ் திரைப்படம் படைத்துள்ளது. இதனை, உலக சாதனை அமைப்பு அங்கீகரித்துப் பாராட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று (ஜன.24) சென்னையில் உள்ள தனியார் அரங்கில் அதனைக் கொண்டாடும் விதமாகவும், இசையமைப்பாளர் இமானின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் இமான், அவரது மனைவி, மகள், அப்பா, இயக்குநர் பார்த்திபன் மற்றும் உலக சாதனை அமைப்பைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மேடையில் இயக்குநர் பார்த்திபன், "எனக்கென்று தனி இடத்தை நானே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பேன். சினிமா மீதான காதலால் 34 வருடமாக, வித்தியாசமான முயற்சியில் மற்றவர்கள் செய்யாததை நாம் செய்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஒத்த செருப்பு, இரவின் நிழல் படங்கள் முடித்து டீன்ஸ் வந்துள்ளேன்.

முதல் லுக் போஸ்டரை ஸ்கிரீனில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்த போது அதற்கு சென்சார் சர்டிபிகேட் வாங்க வேண்டும் என்று சென்சார் ஆபிசில் கேட்டேன். அங்கு, இதுவரை யாரும் வாங்கவில்லை என்று சொன்னதும் எனக்கு ஒரு குஷி. உடனே சென்சார் சர்டிபிகேட் வாங்கி ஸ்கிரீனில் ரிலீஸ் செய்தேன்.

அதற்குத் தான் இந்த உலக சாதனையும் சாதனைக்கான அங்கீகாரமும் கிடைத்தது. இந்த படம் பொருளாதார ரீதியாக வெற்றி பெறும். குழந்தைகளை வைத்து எடுக்கப்பட்ட படம், ஆனால், வழக்கமான கதையாக இருக்காது. ஒரு படத்தின் துவக்கத்திலேயே உலக அரங்கில் பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ விரைவில் இந்த படம் திரையரங்கத்துக்கு வரும்” என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "கலைஞர் நூற்றாண்டு விழா தாமதமாக ஆரம்பித்ததாலும், முதல்வரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் சீக்கிரம் முடிக்க வேண்டியதாக இருந்தது. அதனால், சிலர் மட்டுமே பேசியதாகவும், மேடைக்குப் பின்னால் நின்று தான் பேசியதாகவும், அதை நான் பாசிட்டிவாக தான் சொன்னேன்" என விளக்கம் அளித்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் டி.இமான், "திரைத்துறைக்கு வந்து 23 வருடமாகிவிட்டது. சில சந்தோஷமான பிறந்த நாள் இருந்திருக்கிறது. சில சோகமான பிறந்தநாளும் இருந்திருக்கிறது. நிறைய நடந்திருக்கிறது, இனிப்பான விஷயங்கள், சில கசப்பான நிகழ்வும் நடந்திருக்கிறது. நல்ல நிகழ்வாக இந்த டீன்ஸ் திரைப்படத்தைப் பார்க்கிறேன்.

நிறையத் திரைப்படங்களில் வேலை செய்து இருக்கிறேன், ஆனால், அது ஒரே மாதிரியான ஜானராக இருக்கும்.‌ ஆனால், இந்த படம் வித்தியாசமானதாக, கலவையாக இருந்தது. இதில், பார்த்திபன் கொஞ்சம் தனிப்பட்ட மனிதர் தான்" என கூறினார்.

பின்னர் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து இமான் பேசுகையில், "ஒரு காதலிக்கு இப்படி சர்ப்ரைசாக பிறந்த நாளை கொண்டாடலாம், ஆனால், இன்னொரு மனிதருக்கு இப்படியான செட் அப் செய்து பிறந்த நாள் வாழ்த்து சொல்வது வித்தியாசமாக இருக்கிறது என்று கூறி நன்றி தெரிவித்தார்".

இதையும் படிங்க: மீண்டும் இணைகிறது "கட்டா குஸ்தி" கூட்டணி.. விஷ்னு விஷால் வெளியிட்ட அப்டேட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.