ETV Bharat / entertainment

‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்த பிரபல தயாரிப்பாளர்.. ரிவீவ் என்ன? - Uyir Thamizhukku - UYIR THAMIZHUKKU

Subaskaran appreciated the movie Uyir Thamizhukku: 'உயிர் தமிழுக்கு' திரைப்படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்காக லண்டனில் சிறப்பு காட்சி ஒன்று திரையிடப்பட்ட நிலையில், படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார்.

உயிர் தமிழுக்கு பட போஸ்டர் மற்றும் சுபாஸ்கரன் புகைப்படம்
உயிர் தமிழுக்கு பட போஸ்டர் மற்றும் சுபாஸ்கரன் புகைப்படம் (Credits to Subaskaran and Adham Bava X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 4:36 PM IST

சென்னை: 'உயிர் தமிழுக்கு' படத்தை தான் பார்க்க விரும்புவதாக லைக்கா சுபாஸ்கரன் மின்னஞ்சல் மூலம் படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான ஆதம்பாவாவிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்காக லண்டனில் சிறப்புக் காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்த அவர், நன்றாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து கடந்த மே 10ஆம் தேதி வெளியாகியுள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. 'ஆன்டி இண்டியன்' படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா, இத்திரைப்படத்தை தயாரித்ததுடன், இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தின் முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அமீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார் என்பதால், படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்து வந்தது. தற்போது படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. முன்னதாக, இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜாபர் சாதிக் விவகாரம் குறித்து அமீரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.‌ அப்போது அவர் ‘நீங்கள் லைக்கா சுபாஸ்கரனிடம் கேட்டீர்களா?’ என்றார்.‌ அவருக்கும் லண்டனில் வழக்கு இருப்பதாகவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் லண்டனில் 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆதம்பாவாவிடம் மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பியிருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து, படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாகக் கூறி சுபாஸ்கரன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து 'உயிர் தமிழுக்கு' படத்தை பார்க்க விரும்பியதும், படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஆதம் பாவா கூறியுள்ளார்.

அரசியல் நையாண்டி படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடைசியாக பாடிய பாடலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ''அமாவாசைகள் இருக்கும் அரசியலில் நல்லவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்'' - 'எலக்சன்' குறித்து நடிகர் விஜயகுமார் பேச்சு! - ELECTION MOVIE

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.