ETV Bharat / entertainment

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் யூனியன் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! - actor vijay sethupathi

Actor Vijay Sethupathi: சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற தென்னிந்திய சினிமா, சீரியல் டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர் விஜய்சேதுபதி தனது வாக்கினை செலுத்தினார்.

Film serial Dubbing  election
Film serial Dubbing election
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 7:26 PM IST

சென்னை: தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்களின் சங்கத்திற்கு 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சங்கத்தின் 23 பதவிகளுக்கு இன்றைய தினம் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நடிகரும், சங்கத்தின் தற்போதைய தலைவருமான ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஜேந்திரன் மற்றும் சற்குணம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் நடிகர்கள் போஸ் வெங்கட், நாசர், அம்பிகா, விஜய் சேதுபதி, சரத்குமார் உள்ளிட்டோர் தங்களது வாக்குகளை பதிவிட்டுச் சென்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை அம்பிகா, “யார் வெற்றி பெற்றாலும் நல்லது தான். நல்லதே செய்யுங்கள், அதுதான் இங்கு தேவை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். மேலும், இயக்குநர்கள் பட்டியலில் பெண்களின் பங்கு குறைவாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்தவர், “அதுக்கு காரணம் லக்கு தான். ஏனென்றால், தயாரிப்பாளர்கள் எப்போதும் பயந்து கொண்டே இருப்பார்கள. ஆண் இயக்குநருக்கும், பெண் இயக்குநர் என்பதற்கும் வேறுபாடுகள் உள்ளது. அந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும் என்று நினைக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், “விஜய் அரசியலுக்கு வருவது நல்லது தான். எனக்கு ஆரோக்கியம் இருக்கும் வரை நடிக்க தான் செய்வேன். நல்ல கேரக்டர் வந்தால் சின்னத்திரை, பெரிய திரை என்ற வித்தியாசங்களை பார்க்காமல் நடிப்பேன்” என்றார்.

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், “தளபதி 68 படத்திற்கான ஷூட்டிங் சூடு பிடித்துக் கொண்டு வருகிறது. என் மகன் பிரசாந்த் அதில் நடித்து வருகிறார். பெருமையாக இருக்கிறது, இருந்தாலும் நான் ஷூட்டிங்கில் என்ன செய்தார்கள், இது என்ன கதை என்று எல்லாம் கேட்க மாட்டேன். என்னுடைய படங்களைத் தவிர வேறு எதிலும் தலையிட மாட்டேன். அந்தகன் படம் கூடிய விரைவில் வெளியாகும், தனியாக வர வேண்டும் என்பதற்காகவும், அந்த நாட்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இந்த டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி வருகை புரிந்து வாக்களித்தார். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 1,021 வாக்குகள் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்த வாக்குகள் 1,465 என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோடையில் புதிய பேக்கேஜ்கள் அறிமுகம்.. சென்னையைக் கவர்ந்த ராமோஜி ஃபிலிம் சிட்டி அரங்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.