ETV Bharat / entertainment

'இந்தியன் 2' படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம்.. பின்னணி என்ன? - Indian 2 movie duration cut - INDIAN 2 MOVIE DURATION CUT

Indian 2 movie duration cut: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, பிரியா பவானிசங்கர், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் திரையில் ஒடிக்கொண்டிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படம்
இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படம் (Credits - LYCA X Account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 1:07 PM IST

Updated : Jul 15, 2024, 2:52 PM IST

சென்னை: லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 12-ஆம் தேதி திரைக்கு வந்த 'இந்தியன் 2' உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு உலகம் முழுவதும் வெளியான 'இந்தியன் 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் நீளம் கருதி 'இந்தியன் 2' மற்றும் 'இந்தியன் 3' என இரண்டு பாகங்கள் ஆக பிரிக்கப்பட்டது.

இருப்பினும் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் விறுவிறுப்பு இல்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதோடு, 3 மணிநேரம் ஓடும் நீளமான படம் எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது படத்தின் 15 நிமிட காட்சியை படக்குழு நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் 15 நிமிடத்தை நீக்கி இந்தியாவிற்கான சென்சார் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை முதல் நீக்கப்பட்ட காட்சிகளோடு திரைப்படம் ஒளிபரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழா எப்படி இருந்தது..ரஜினிகாந்த் கூறிய தகவல்!

Last Updated : Jul 15, 2024, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.