ETV Bharat / entertainment

சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் விசேஷம்.. சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து! - sivakarthikeyan wife pregnant - SIVAKARTHIKEYAN WIFE PREGNANT

Sivakarthikeyan wife pregnant: நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sivakarthikeyan family Image
குடும்பத்தினருடன் சிவகார்த்திகேயன் புகைப்படம் (Credits - Sivakarthikeyan X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 3:34 PM IST

Updated : May 30, 2024, 5:40 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், குறுகிய காலத்தில் இளைஞர்களை கவர்ந்து பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். மேலும், சிவகார்த்திகேயன் நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத் திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.

இவருக்கும், ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், ஆராதனா என்ற பெண் குழந்தையும், குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தி இருவரும் தங்களது நெருங்கிய வட்டாரத்தில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அதில் ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. அமரன் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார்.‌ சிவகார்த்திகேயன் வீட்டில் மீண்டும் விஷேசம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: துருவா சர்ஜா பிறந்தநாளன்று வெளியாகும் 'மார்ட்டின்' திரைப்படம்! - Martin Movie Release Date

Last Updated : May 30, 2024, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.