ETV Bharat / entertainment

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை க்ளிக்ஸ்..! - Sivakarthikeyan

A.R.Murugadoss: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் பூஜை புகைப்படங்களை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

A.R.Murugadoss
சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பூஜை க்ளிக்ஸ்..!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 12:54 PM IST

சென்னை: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை, ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக்ஷன் கலந்த படமாக உருவாகும் இப்படத்திற்கு, சமீபத்தில் பூஜை நடைபெற்றது.‌

இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக விருந்தினர்கள் கலந்து கொண்டனர். படத்திற்கு போடப்பட்ட பூஜை புகைப்படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று (பிப்.15) பதிவிட்டுள்ளார். இப்படத்தில், நடிகை ருக்மணி வஸந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் சுதீப் எலமான் ஒளிப்பதிவு செய்கிறார். ஶ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். அருண் வெஞ்சரமுது கலை இயக்கம் செய்கிறார். சண்டைக் காட்சிகளை மாஸ்டர் திலீப் சுப்புராயன் வடிவமைக்கவுள்ளார். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் முழு விவரங்கள் ஒவ்வொன்றாக, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களில் இருக்கும் மாஸ் ஆக்ஷன் காட்சிகளும் இப்படத்தில் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை திரையில் தோன்றிராத மிக வித்தியாசமான ஸ்டைலிஷ் தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

முன்னதாக, தமிழ் சினிமாவில் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி என மிகப்பெரிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடைசியாக தமிழில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேனியில் பரவும் செவட்டை நோயைக் கட்டுப்படுத்த பருத்தி விவசாயிகள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.