ETV Bharat / entertainment

பத்து எண்றதுகுள்ள கங்குவா இங்க வரணும்.. மிரட்டலுடன் வெளியானது 'கங்குவா' டிரெய்லர்! - KANGUVA TRAILER - KANGUVA TRAILER

KANGUVA TRAILER: இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கங்குவா படத்தில் சூர்யா
கங்குவா படத்தில் சூர்யா (Credits - Studio green productions)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 1:21 PM IST

சென்னை: ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கங்குவா'. பிரமாண்ட பொருட்செலவில் உருவகியுள்ள படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஏழாம் அறிவுக்கு பிறகு சூர்யா திரை வாழ்வில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படமாக 'கங்குவா' அமைந்துள்ளது.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. ‘கங்குவா’ படத்தின் புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழு, ஏற்கனவே நடிகர் சூர்யா பிறந்தநாளுக்கு 'ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே' என்ற பாடலை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

மிரட்டலான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் கங்குவா டிரெய்லர் உருவாகியுள்ளது. ’10 எண்றதுகுள்ள கங்குவா இங்க வரணும்’ என்ற வசனத்துடன் தொடங்கும் கங்குவா டிரெய்லரில் சூர்யா ஆக்ரோஷமாக தோன்றுகிறார். ’உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா’ என்ற வசனம் பேசுகிறார். ரத்தம் தெறிக்கும் பல காட்சிகள் கொண்ட இந்த டிரெய்லரில் பாபி தியோல் வித்தியாசமாக தோன்றுகிறார். 12ஆம் நூற்றாண்டை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கங்குவா படத்தின் பிரமாண்ட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் விவாகரத்து? - சமூக வலைதளத்தில் வைரலான வீடியோ உண்மையா? - abhishek Bachchan Aishwarya Rai

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.