சென்னை: சென்னை அண்ணா நகரில் தனியார் ஊடக நிறுவன அலுவலக திறப்பு விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நடிகர்கள் அமீர், தம்பி ராமையா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், “ஜூன் 4ஆம் தேதி ஆட்சி அமைந்தவுடன் ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்புவேன் என்று பிரதமர் மோடி கூறியது குறித்த கேள்விக்கு, மோடி தான் முதலில் சிறை செல்லுவார். தேர்தல் பத்திரத்தில் ரூ.6,600 கோடிக்கு மேலாக பணம் பெற்றுள்ளனர்.
அமலாக்கத்துறை சோதனை வழியாகவும் பணம் வாங்கி உள்ளனர். தமிழ்நாட்டு மக்களை மோடி எந்த அளவுக்கு மதித்தார் என்பது தெரியாதா? பேரிடர் காலங்களில் மோடி அறிக்கைக் கூட விடவில்லை, ஆறுதலும் கூறவில்லை. அவமதிக்கிறார்கள் என்றால் என்ன செய்ய வேண்டும், எல்லாரும் வரும்போது காலில் விழுந்து கும்பிட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
60 ஆண்டு 70 ஆண்டு காலம் வாழ்ந்து மின் இணைப்பு, குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு உள்ளது; சாலை போட்டுள்ளார்கள், வீட்டு வரி வாங்கி உள்ளார்கள். 60 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஆக்கிரமிப்பு என்று தெரிகிறதா? அரசு ஆக்கிரமித்தவை பற்றி கூறவா? வள்ளுவர் கோட்டமே ஏரிகள் உள்ள இடம்தான். திடீரென்று ஆக்கிரமிப்பு என்று சொல்லி அப்புறப்படுத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.
இளையராஜா - வைரமுத்து சர்ச்சை குறித்தான கேள்விக்கு, திரைப்படங்கள் என்பது முன்னர் மாதிரி இல்லை. ஒரு முறை படத்தை தொலைக்காட்சிக்கு கொடுத்துவிட்டால் பல ஆண்டுகளுக்கு உரிமம் வைத்து கொள்வார்கள். தயாரிப்பாளருக்கும், படைப்பாளருக்கும் தொகையாக ஒன்றும் செல்வது கிடையாது.
முதல் மரியாதை படத்திற்கு இளையராஜா இரண்டு லட்சம் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், படம் ஓடுமா? ஓடாதா? என்று தெரியவில்லை எனக்கூறி, அந்த பணத்தை வாங்க மறுத்து விட்டார். முன்னர் வானொலியில் பாட்டை ஒலிபரப்ப வேண்டும் என்றால், ராயலிட்டி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது அது வழங்கப்படவில்லை. தவறாக அர்த்தம் புரிந்தவர்கள் இளையராஜா பேராசையில் பணம் கேட்கிறார் என்று நினைக்கிறார்கள்” என சீமான் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குட் பேட் அக்லி ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.. மூன்று கதாபாத்திரத்தில் அஜித்குமார்? - GOOD BAD UGLY FIRST LOOK