ETV Bharat / entertainment

சந்தானத்தின் இங்கு நான் தான் கிங்கு ட்ரெய்லர் வெளியானது! - Inga naan thaan kingu trailer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 6:40 PM IST

Inga Naan Thaan Kingu: இந்த கோடை விடுமுறைக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக இங்க நான் தான் கிங்கு படம் உருவாகியுள்ளதாக படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது

Etv Bharat
Etv Bharat

சென்னை: நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. காமெடி நடிகராக இருந்து பின்னர் ஹீரோவாக ஒருசில படங்களில் நடித்தார். அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறவில்லை என்றாலும், அவர் நடித்த ஏ1, தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டர்ன்ஸ், டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்தது.

இந்த நிலையில், G.N.அன்புச்செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் 'இங்க நான் தான் கிங்கு' என்ற படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் வெளியிட்டார். இப்படத்தில் அனைத்து இளைஞர்களும் ரசித்துக் கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஆனந்த் நாராயண் இயக்கியுள்ள இப்படத்தில், சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், மறைந்த நடிகர் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழிச்சூர் அரவிந்தன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். இந்தப் படத்திற்கு ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், எம்.தியாகராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

கல்யாண், பாபா பாஸ்கர் ஆகியோர் நடன இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். வருகிற மே 10ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோடை விடுமுறைக்கு ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக இங்க நான்தான் கிங்கு படம் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் ரிலீஸ் எப்போது? வெளியான முக்கிய அப்டேட்! - Raayan Release Date

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.