ETV Bharat / entertainment

பிக்பாஸ் வீட்டில் இடம் மாறிய இளசுகள்... விறுவிறுப்பான ப்ரோமோ வெளியீடு! - BIGG BOSS 8 TAMIL

bigg boss 8 Promo: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் ஆண்கள் அணிக்கு சாச்சனாவும், பெண்கள் அணிக்கு ஜெஃப்ரியும் இடம் மாறியுள்ளனர்.

பிக்பாஸ் 8 தமிழ்
பிக்பாஸ் 8 தமிழ் (Credits - vijay sethupathi X Page, sachana_official_ Instagram)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Oct 21, 2024, 1:24 PM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஜெஃப்ரி, சாச்சனா ஆகியோர் வீடு மாற்றப்பட்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி இரண்டு வாரங்கள் ஆன நிலையில், அவ்வப் போது விறுவிறுப்பாக இருந்தாலும், கிட்டத்தட்ட அனைத்து நாட்களும் உப்பு சப்பின்றி கண்டெண்ட் இல்லாமல் செல்கிறது. கடந்த வாரம் ஆண்கள் அணியிலிருந்து தீபக் பெண்கள் அணிக்கும், தர்ஷா ஆண்கள் அணிக்கும் இடம் மாறினர்.

தீபக் தனது காலில் சிறிய காயம் ஏற்பட்டிருந்தாலும் அவர் விளையாடிய விதம் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதி வார இறுதியில் தீபக்கை நன்றாக விளையாடியதாக பாராட்டினார். அதே நேரத்தில் தர்ஷா ஆண்கள் அணியில் தந்திரம் செய்து அணியில் ஒற்றுமையை உடைப்பேன் என்ற பெயரில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தினார். இது தர்ஷாவுக்கே பாதகமாக அமைந்தது.

தர்ஷா நாம் சரியாக பேசுகிறோமா என ஒரு நிதானம் இல்லாமல் குழப்ப நிலையிலேயே விளையாடினார். இது தர்ஷா விஜய் சேதுபதியிடம் வார இறுதி எபிசோடில் பேசிய விதத்திலேயே தெரிந்தது. இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரம் ஆண்கள், பெண்கள் அணி என்று இல்லாமல் யாரை வேண்டுமானாலும் நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் கூறுகிறார்.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் ஆண்கள் அணிக்கு சாச்சனாவும், பெண்கள் அணிக்கு ஜெஃப்ரியும் இடம் மாறியுள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இரண்டு இளம் போட்டியாளர்கள் இடம் மாறியுள்ளனர்.

இதையும் படிங்க: "கருத்து சொல்லலாம், வன்மத்தை கக்க கூடாது"... எலிமினேட் ஆன ஆர்னவை எச்சரித்த விஜய் சேதுபதி!

கடந்த வாரம் சாச்சனாவிற்கும், அன்ஷிதாவிற்கும் சாப்பாட்டு விஷயத்தில் பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பிக்பாஸ் வீடே போர்க்களம் போல காட்சியளித்தது. இந்த வாரம் ஆண்கள் அணியில் சாச்சனாவும், பெண்கள் அணியில் ஜெஃப்ரியும் எவ்வாறு விளையாட போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.