சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் ஒன்றான ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் டில்லி பாபு நேற்று நள்ளிரவு உடல் நலக்குறைவால் காலமானார். பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2015இல் வெளியான திரைப்படம் 'உறுமீன்' இப்படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி (Axess film factory) நிறுவனம் அதன் பிறகு பல இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து பல நல்ல படங்களை தயாரித்தது.
விஷ்ணு விஷால் நடித்த ’ராட்சசன்’, அசோக் செல்வன் நடித்த ’ஓ மை கடவுளே’, அருள்நிதி நடித்த ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ’மரகத நாணயம்’ கண்கள் என பல ஹிட் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி மிடிக்கிளாஸ், வளையம், யார் அழைப்பது படங்களை தயாரித்து வரும் நிலையில், அதன் நிறுவனர் டில்லி பாபு நேற்றிரவு உடல் நலக் குறைவால் காலமானார். மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நடிகர் சங்க தேர்தலை சந்திக்க பயமா? - கருணாஸ் பதிலடி! - south indian artistes meet