ETV Bharat / entertainment

"படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியாவது மிக முக்கியம்" - 'வேட்டையன்' இயக்குநர் ஞானவேல் பேச்சு! - VETTAIYAN THANKS GIVING MEET

வேட்டையன் பட நன்றி அறிவிப்பு விழாவில், படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியாவது மிக முக்கியம் என இயக்குநர் டி.ஜே.ஞானவேல் வலியுறுத்தி பேசினார்.

இயக்குநர் டி.ஜே.ஞானவேல்
இயக்குநர் டி.ஜே.ஞானவேல் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2024, 6:35 PM IST

சென்னை : இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய் பீம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து சமீபத்தில் இவரது இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதில், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஞானவேல், ரித்திகா சிங் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

மேடையில் பேசிய இயக்குநர் ஞானவேல், "இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம் நன்றி அறிவித்தல் தான். நம்பிக்கையில் தான் இது தொடங்கியது. நன்றியில் தான் இது முடிய வேண்டும். என்மீது நம்பிக்கை வைத்து ஜெய்பீம் படத்துக்கு பிறகு கன்டென்ட் உள்ள படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்துடனும், ஈடுபாடுடனும் என்னை முதலில் இந்த படத்துக்கு அழைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி. அவர் இல்லை என்றால் இந்த பயணம் இல்லை.

இதையும் படிங்க : நியூ லுக்கில் நாக சைதன்யா - சோபிதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இத்தனை பேர் எனக்கு சாத்தியமில்லை. ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இதுபோன்ற கருத்துள்ள ஒரு படம் பண்ண தனி தைரியம் வேண்டும். அந்த தைரியம் தான் அவரை சூப்பர் ஸ்டாராக வைத்துள்ளது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதில், நடித்த அமிதாப் பச்சன் தொடங்கி அனைவரும் கதையை நம்பி வந்தனர். முடிந்த அளவு குழுவாக இணைந்து நியாயப்படுத்தியுள்ளோம். படைப்பு சுதந்திரத்துடன் ஒரு படம் வெளியே வருவது முக்கியமான ஒன்று என்று நினைக்கிறேன். இதன் நிறை குறைகளுக்கு நான் பொறுப்பு.

எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இது உண்மையாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது மகிழ்ச்சி. மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாவுக்கும் நன்றி" என்று பேசினார். நிகழ்ச்சி முடிந்ததும் இயக்குநர் ஞானவேல், நடிகை ரித்திகா உள்ளிட்டோர் செய்தியாளர்களுக்கு பிரியாணி பரிமாறினர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.