ETV Bharat / entertainment

"என்ன என்ன புரியல".. கூலி ஸ்பாட்டில் ஓணம் நடனமாடிய ரஜினிகாந்த்! - Rajinikanth Onam dance in Coolie - RAJINIKANTH ONAM DANCE IN COOLIE

கூலி படப்பிடிப்புத் தளத்தில், மனசிலாயோ பாடலுக்கு படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் நடனமாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய படக்குழுவினர்
மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய படக்குழுவினர் (Credits - sun pictures x page)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 15, 2024, 6:28 PM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்திலிருந்து 'மனசிலாயோ' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் இப்பாடலில் படக்குழுவினர் பயன்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : 'குக் வித் கோமாளி'யில் இருந்து வெளியேறும் மணிமேகலை; பிரபல தொகுப்பாளினி மீது பரபரப்பு குற்றச்சாட்டு! - tv anchor manimegalai

இந்நிலையில், ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடிகர்கள் நாகர்ஜூனா, சத்யராஜ், மலையாள நடிகர் சவுபின் ஷஹீர், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கும் அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், கூலி படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் ஓணம் கொண்டாடினார். ரஜினிகாந்த் படப்பிடிப்புத் தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடி மகிழ்ந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.