ETV Bharat / entertainment

சர்வதேச அளவில் பாராட்டை பெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரெய்லர் வெளியானது! - kottukkaali trailer - KOTTUKKAALI TRAILER

kottukkaali movie trailer: பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள 'கொட்டுக்காளி' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கொட்டுக்காளி பட காட்சிகள்
கொட்டுக்காளி பட காட்சிகள் (Credits - Sivakarthikeyan Productions)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 13, 2024, 1:36 PM IST

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கொட்டுக்காளி'. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ரிலீஸுக்கு முன்பே கொட்டுக்காளி திரைப்படம் 53வது டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருது, 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா என திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. கொட்டுக்காளி படம் live sound தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுள்ளது.

தமிழ் சினிமாவில் 'கூழாங்கல்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பி.எஸ்.வினோத்ராஜ், 'கொட்டுக்காளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். பிரபல இயக்குநர்கள் மத்தியில் இந்தியாவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் என நற்பெயரையும் பெற்று வருகிறார்.

அதேபோல் விடுதலை திரைப்படம் மூலம் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்ற சூரி அதன் பிறகு, கொட்டுக்காளி படத்தின் மூலம் நடிப்பில் அடுத்த பரிணாமத்தை அடைந்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் எனது சினிமா வாழ்க்கையில் நான் நடித்த சிறந்த படம் ’கொட்டுக்காளி’ எனவும் நடிகர் சூரி கூறியுள்ளார். கொட்டுக்காளி டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை காண ஆவலுடன் உள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: 'கண்ணாடி வளையலில் தன்னே நன்னானே'..தங்கலான் அறுவடை பாடல் வெளியானது! - aruvadai paadal out now

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.