ETV Bharat / entertainment

விஷால் படங்களுக்கு கட்டுப்பாடு.. கமிட்டாகியுள்ள படங்களை பாதிக்குமா? தயாரிப்பாளர் சங்க நிர்வாகி விளக்கம்! - Vishal new movie Restrictions - VISHAL NEW MOVIE RESTRICTIONS

Actor Vishal: தயாரிப்பாளர் சங்க நிதியை தவறாக பயன்படுத்தியதால், இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று சங்கம் அறிவுறுத்தி உள்ளது.

விஷால்
விஷால் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 26, 2024, 5:50 PM IST

சென்னை: நடிகர் விஷால் இனி நடிக்கும் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, “கடந்த 2017-2019 ஆண்டு வரையிலான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்த தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தமிழ்நாடு அரசு தனி அதிகாரியை நியமித்தது.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

2019 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி (Special Officer) சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு Special Auditorரை நியமித்தார். அந்த Special Auditor கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில், அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதியினை தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள்.

அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடியே 50 லட்சம், மற்றும் கடந்த 2017-2019 ஆண்டுகளில் வரவு-செலவு ரூ.5 கோடியும் சேர்த்து சுமார் ரூ12-கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கு திரும்ப PRODUCERS அளிக்க வேண்டும் என்று விஷால்க்கு பலமுறை தெரியப்படுத்தியும், அவர் இதுநாள் வரை எந்தவிதமான பதிலும் தராமல் உள்ளார்.

எனவே, மேற்படி விஷயத்தினை சரிசெய்யும் பொருட்டு ஏற்னகவே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவின் பரிந்துரைபடி ஏகமனதாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனிவரும் காலங்களில் நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “விஷாலுக்கு ரெட் கார்டு கிடையாது. இனிவரும் காலங்களில் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆலோசிக்க வேண்டும். தற்போது பணியாற்றி வரும் படங்களுக்கு செயற்குழு மூலம் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: எப்படி இருக்கிறது ராயன்? - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து! - RAYAN MOVIE REVIEW

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.