ETV Bharat / entertainment

கல்கி 2898 ஏடி ரிலீஸ் தேதி அறிவிப்பு! - KALKI 2898 AD releases on June 27 - KALKI 2898 AD RELEASES ON JUNE 27

Kalki 2898 AD: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏடி' திரைப்படமானது ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Kalki 2898AD
Kalki 2898AD
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 9:27 PM IST

சென்னை: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி'. இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா டக்குபதி, நடிகைகள் தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படம் வரும் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படம் தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும், பான் இந்தியா படமாக உருவாகிறது. சமீபத்தில், அமிதாப் பச்சனின் தோற்றம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும், படத்தில் நடிகர் பிரபாஸின் பெயர் பைரவா எனக் குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விடுதலை பாகம் 2-ல் சூரிக்கு காட்சிகள் குறைவா? குமரேசன் கூறிய முக்கிய அப்டேட்! - VIDUTHALAI PART 2 UPDATE

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.