ETV Bharat / entertainment

சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா... ரஜினிகாந்துடன் உரையாடியது குறித்து பகிர்ந்த வைரமுத்து! - RAJINIKANTH VAIRAMUTHU

Rajinikanth vairamuthu conversation: நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து அவருடன் 80 நிமிடங்கள் உரையாடியது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்துடன் வைரமுத்து
ரஜினிகாந்துடன் வைரமுத்து (Credits - @Vairamuthu X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 4:57 PM IST

சென்னை: பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'வேட்டையன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரஜினிகாந்த், ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு தனது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.‌ மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசியுள்ளார். ரஜினிகாந்த் மற்றும் வைரமுத்து இருவரும் நீண்ட கால நண்பர்கள் ஆவர். நடிகர் ரஜினிகாந்துடன் உரையாடியது குறித்து வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளதார்.

அந்த பதிவில், “கடிகாரம் பாராத உரையாடல் சில பேரோடு தான். வாய்க்கும் அவருள் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 80 நிமிடங்கள் உரையாடியிருக்கிறோம், ஒரே ஒரு‘கிரீன் டீ’யைத் தவிர எந்த இடைஞ்சலும் இல்லை, இடைவெளியும் இல்லை. சினிமாவின் அரசியல், அரசியலின் சினிமா வாழ்வியல் - சமூகவியல், கூட்டணிக் கணக்குகள், தலைவர்கள், தனிநபர்கள் என்று எல்லாத் தலைப்புகளும் எங்கள் உரையாடலில் ஊடாடி ஓய்ந்தன. எதுகுறித்தும் அவருக்கொரு தெளிவிருக்கிறது.

இதையும் படிங்க: 15 ஆண்டுகளாக 6 ஆயிரம் கிளிகளுக்கு உணவளிக்கும் ’Birdman’ சுதர்சன்... பறவைகளின் தந்தையாக வாழும் ரியல் மெய்யழகன்!

தன் முடிவின் மீது உரசிப் பார்த்து, உண்மை காணும் குணம் இருக்கிறது. நான் அவருக்குச் சொன்ன பதில்களை விட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவ. தவத்திற்கு ஒருவர், தர்க்கத்திற்கு இருவர். நாங்கள் தர்க்கத்தையே தவமாக்கிக் கொண்டோம். ஒரு காதலியைப் பிரிவது போல் விடைகொண்டு வந்தேன். இரு தரப்புக்கும் அறிவும் சுவையும் தருவதே ஆரோக்கியமான சந்திப்பு அது இது” என பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.