ETV Bharat / entertainment

ராஜமெளலி டூ ரவி வர்மன் வரை.. இந்திய திரைக்கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர்! - Oscars 2025

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 9:35 PM IST

Oscars 2025: ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகச் சேர இயக்குநர் ராஜமெளலி, அவரது மனைவி ராம ராஜமெளலி, ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் உள்ளிட்ட 57 நாடுகளைச் சேர்ந்த 487 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஆஸ்கர் குழு அறிவித்துள்ளது.

ராஜமெளலி, அவரது மனைவி ராம ராஜமெளலி புகைப்படம்
ராஜமெளலி, அவரது மனைவி ராம ராஜமெளலி புகைப்படம் (Credits - SS Rajamouli X Page)

ஹைதராபாத்: ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராகச் சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைத்துறை கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 57 நாடுகளைச் சேர்ந்த 487 பேருக்கு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 19 ஆஸ்கர் வின்னர்ஸ் மற்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேர் உட்பட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்கர் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அகாடமியில் சேர புதிதாக அழைக்கப்பட்ட உறுப்பினர்களை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். 2024ஆம் ஆண்டில் 44 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது உருவாக்கப்படும் இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் 57 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதில் இயக்குநர் ராஜமெளலி மற்றும் அவரது மனைவி ராம ராஜமெளலி, நடிகை ஷபானா ஆஸ்மி, ரித்தேஷ் சித்வானி, ஷீத்தல் ஷர்மா, ஆனந்த் குமார் டக்கர், நிஷா பஹுஜா, ஹேமல் திரிவேதி, கிதேஷ் பாண்டியா, தயாரிப்பாளர் ரீமா தாஸ், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் மற்றும் 'நாட்டு நாட்டு' பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரஷித் உள்ளிட்டோருக்கு உறுப்பினராக இணைவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அழைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 10,910 ஆக உயரும் என்றும், வரும் 2025ஆம் ஆண்டு 97வது ஆஸ்கரில் 9,934 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இயக்குநர் ராஜமெளலி தனது அடுத்த படத்தில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிக்கிறார். இதற்கான தோற்ற தற்போது சோதனைகள் முடிந்துள்ளது.

இதையும் படிங்க: கூலி பட மாஸ் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்! - Coolie Rajinikanth Look

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.