ETV Bharat / entertainment

”எனது அழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”... மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன்! - Nayanthara vignesh shivan - NAYANTHARA VIGNESH SHIVAN

Nayanthara vignesh shivan sons birthday: நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய நிலையில், அதுகுறித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

தங்களது மகன்களுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தங்களது மகன்களுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் (Credits - nayanthara, wikkiofficial Instagram account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 27, 2024, 2:54 PM IST

சென்னை: சினிமாத்துறையில் ரசிகர்கள் விரும்பும் ஜோடிகளாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் வலம் வருகின்றனர். நானும் ரௌடி தான் படத்தின் போது விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த ஜோடிக்கு உயிர், உலகு என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீப காலமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தங்கள் மகன்களுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும் நயன்தாரா வெளிநாடு செல்லும் புகைப்படங்களையும் அதிகம் பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டில் நயன்தாரா காது குத்திக் கொள்ளும் வீடியோ வெளியாகி ட்ரெண்டானது.

இந்நிலையில் தனது மகன்கள் உயிர், உலகு பிறந்தநாளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் வெளிநாட்டில் அவர்களுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு, மனமுருகி வாழ்த்து தெரிவித்துள்ளனர். நயன்தாரா வெளியிட்டுள்ள பிறந்தநாள் பதிவில், “எனது அழகர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடன் நான் ஒவ்வொரு நொடியும் செலவிடும் போது ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்த உணர்வை தருகிறது. எனது குழந்தைகள் உயிர், உலகு ஆகியோரை மனதார விரும்புகிறேன். அம்மா, அப்பா ஆகிய நாங்கள் இருவரும் உங்களை விண்ணை முட்டும் அளவு விரும்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

அதேபோல் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு உயிர், உலகு என பெயரிட்டது போல எங்களுக்கு உயிர், உலகமாக இருக்கிறீர்கள். எனது இரண்டு குழந்தைகளுக்கு இன்றுடன் 2 வயதாகிறது. எங்களது குழந்தைகளுக்கு தரும் அன்பின் மூலம் கடவுள் எங்களை எந்தளவிற்கு ஆசிர்வதித்துள்ளார் என்பதை உணர முடிகிறது.

இதையும் படிங்க:'Heart of amaran'... அமரன் படத்தில் சாய் பல்லவியின் மனதை வருடும் ப்ரோமோ வெளியீடு! - Amaran sai pallavi promo

எனது குழந்தைகள் உயிர் மற்றும் உலகு ஆகியோருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார். நயன்தாரா தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி 1960 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் Love Insurance Kompany என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.