மும்பை: கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மும்பை பாந்த்ரா பகுதியில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வசிக்கும் கேலக்சி அபார்மண்டஸ் முன்பு, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்ட தப்பிச் சென்றனர். இச்சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதன்பின்னர், தொழிலதிபர் சச்சின் முன்ஜெல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் குருகிராம் பகுதியைச் சேர்ந்த விஷால் என்கிற கலு, உட்பட மற்றும் ஒருவரை போலீசார் தீவர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே இந்த வழக்கு மும்பை குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் அச்சுறுத்துதலை ஏற்படுத்துவதற்காகவே நடிகர் சல்மான் கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், துப்பாக்கு சூடு நடத்தியவர்கள் பனுவல் பகுதியில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டிற்கும் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனிடையே பீகாரில் உள்ள கைது செய்யப்பட்டவர்கள் குடும்பத்தினரிடம் சாட்சியங்களை ஆவணப்படுத்திய காவல் துறையினர், இந்த வழக்கு தொடர்பாக ஹரியான உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏழு பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சுடு சம்பவம் குறித்து நடிகர் சல்மான் கான் காவல் துறை மீது வருத்தத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தியதாகவும், பாதுகாப்பு பணியில் பலர் ஈடுபட்டிருந்த போதும் இத்தகைய சம்பவம் நடந்ததை சுட்டிக்காட்டி காவல்துறை வழங்கும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான மீது கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிறையில் இருக்கும் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "அடுத்த முறை தாக்குதல் நிச்சயம் தவறாது, எங்கள் சக்தியை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக இந்த தாக்குதல்" உள்ளிட்ட மிரட்டல் வார்த்தைகளை பதிவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அன்மோல் பிஷ்னோய் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்தது விசாரணை மேற்கொண்டு வந்த மும்பை போலீசார். தற்போது, அன்மோல் பிஷ்னோய் மீது அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நடிகர் சல்மான்கான் வீடு முன் துப்பாக்கிச் சூடு சம்பவம்! பிஷ்னாய் கும்பல் கொலை மிரட்டல்!