ஹைதராபாத்: மலையாள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து விரிவான அறிக்கையை கேரள அரசு, நீதிபதி ஹேமா கமிஷன் மூலம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, மலையாள நடிகைகள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து வெளிப்படையாக தெரிவித்தனர். இதனையடுத்து, மலையாள நடிகர்கள் சித்திக் மற்றும் பாபுராஜ் மீது பாலியல் வன்கொடுமை புகார் வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தால் மலையாள திரைத்துறை ஸ்தம்பித்து போன நிலையில், மலையாள நடிகர்கள் சங்க நிர்வாகிகள் மோகன்லால் உட்பட 17 பேர் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது மேலும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், மலையாள நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு தொடுபுழா பகுதியில் நடந்த படப்பிடிப்பில் தன்னிடம் நடிகர் ஜெயசூர்யா மிகவும் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
காவல் அதிகாரிகள் பூங்குழலி மற்றும் ஐஷ்வர்யா டோங்ரே ஆகியோர் அந்த நடிகையிடம் புகார் தொடர்பாக விரிவான தகவலை பெற்றுக் கொண்டனர். அதேபோல், மற்றொரு மலையாள நடிகை, நடிகர் ஜெயசூர்யா கடந்த 2008ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். நடிகர் ஜெயசூர்யா ’என் மன வானில்’, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற ஒரு சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
மேலும், மலையாள இளம் நடிகை ஒருவர் தன்னை நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாக திருவனந்தபுரம் அருங்காட்சியகம் போலீசாரிடம் மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்துள்ளார். அதாவது, கடந்த 2016ஆம் ஆண்டு சித்திக் நடிக்கும் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த பிறகு, மஸ்கட்டில் உள்ள ஹோட்டலில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே இந்த நடிகை சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது ஹேமா கமிட்டி சர்ச்சையில் சிக்கிய பிறகு நடிகர் சித்திக் நடிகர் சங்கப் பதிவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: இது வெங்கட் பிரபு கேம்.. எஸ்கே உடன் இணையும் அடுத்தடுத்த டாப் இயக்குநர்கள்! - Sivakarthikeyan venkat prabhu