ஹைதராபாத்: மலையாள நடிகர் ஜெய சூர்யா தனிப்பட்ட காரணத்திற்காக தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ளார். இந்நிலையில், ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி மலையாள திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், நடிகர் ஜெயசூர்யா மீது வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு அறிக்கையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது பிறந்தநாளான இன்று எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் மற்றும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. நான் தனிப்பட்ட காரணத்திற்காக என்னுடைய குடும்பத்துடன் கடந்த மாதம் தான் அமெரிக்கா வந்தேன்.
இந்நிலையில், என் மீது பொய்யாக பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. நான் இதை சட்ட ரீதியாக சந்திப்பேன். என்னுடைய வழக்கறிஞர் குழு இதனை எதிர்க்கொள்ளும். யார் வேண்டுமானாலும், யார் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை வைப்பது சுலபம்.
துன்புறுத்தல் என்ற பொய்யான குற்றச்சாட்டினை எதிர்கொள்வது துன்புறுத்தலைப் போலவே வேதனையானது. ஒரு பொய் எப்போதும் உண்மையை விட வேகமாக பயணிக்கும். ஆனால், உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன். எனக்கு நீதித்துறை மேல் நம்பிக்கை இருக்கிறது. நான் எனது வேலைகள் முடிந்தவுடன் அமெரிக்காவில் இருந்து திரும்பி இந்தியா வருவேன். இந்தியாவிற்கு வந்து நான் குற்றமற்றவன் என நிரூபிப்பேன்” என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஹேமா கமிட்டி அறிக்கை; ஆவேசமடைந்த ஜீவா.. பிரஸ் மீட்டில் நடந்தது என்ன? - jeeva controversy speech