ETV Bharat / entertainment

தொடங்கியது 'கூலி' படத்தின் படப்பிடிப்பு.. ரஜினிகாந்துடன் நடிக்கும் நடிகர்கள் யார்? - Coolie movie shooting started - COOLIE MOVIE SHOOTING STARTED

Rajinikanth coolie shooting started: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படமான 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

கூலி படப்பிடிப்பு தொடக்கம் குறித்து வெளியான போஸ்டர்
கூலி படப்பிடிப்பு தொடக்கம் குறித்து வெளியான போஸ்டர் (Credits - @Sunpictures X account)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 1:26 PM IST

சென்னை: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, ரஜினிகாந்தின் 171வது (Rajinikanth 171 Coolie) படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படத்திற்கு, 'கூலி' எனத் தலைப்பிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெளியான இப்படத்தின் அறிவிப்பு வீடியோவில் வந்த ரஜினிகாந்தின் மாஸ் பஞ்ச் வசனங்கள் மேலும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. மேலும், படத்தின் அறிவிப்பு வீடியோவை வைத்து கூலி, தங்கம் கடத்தல் தொடர்பான கதை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. இத்தகவலை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு உறுதி செய்துள்ளது, படக்குழு. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலி படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார். மேலும், கூலி படத்தில் ரஜினிகாந்திற்கு நண்பராக நடிகர் சத்யராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல, லியோ படத்தில் பணியாற்றிய கிரிஷ் கங்காதரன் கூலி படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். விரைவில் கூலி படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைத்தது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களின் ஒருவரான ரஜினிகாந்த், தற்போது பிரபல இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம்
ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் (Credits - @shrutzhaasan Instagram account)

இதனிடையே, கூலி படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, நடிகை ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று தனது புகைப்படத்துடன் DAY 1 #coolie என்று ஸ்டோரியாக பதிவிட்டிருந்தார். பின்னர், இந்த ஸ்டோரியை வெளியிட்ட அரைமணி நேரத்தில் தனது இன்ஸ்டாகிராமில் இருந்து ஸ்ருதிஹாசன் நீக்கிவிட்டார். ஸ்ருதிஹாசன் இப்படத்தில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அனிமல், ஆர்ஆர்ஆர், பாகுபலி-2 படங்களை பின்னுக்குத் தள்ளும் கல்கி! ரூ.725 கோடியை தாண்டி வசூல் சாதனை! - kalki cross Rs700 crore box office

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.