ETV Bharat / entertainment

கல்கி 2898 AD படத்திற்கு புது சிக்கல்.. வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய கோயில் நிர்வாகி! - KALKI 2898 AD MOVIE CASE - KALKI 2898 AD MOVIE CASE

Kalki 2898 AD movie case: கல்கி 2898 AD படத்தில் கல்கி அவதாரம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி படக்குழுவிடம் விளக்கம் கேட்டு கல்கி கோயிலைச் சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கல்கி 2898 AD பட போஸ்டர்
கல்கி 2898 AD பட போஸ்டர் (Credits - Film poster)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 21, 2024, 7:01 PM IST

காசியாபாத் (உத்தரப் பிரதேசம்): இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. இத்திரைப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் மகாபாரத கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கல்கி 2898 AD திரைப்படம் வெளியானது முதல் பல்வேறு விவாதங்களை கிளப்பி வருகிறது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கல்கி கோயிலைச் சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர், கல்கி அவதாரம் குறித்து கல்கி 2898 AD படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்து படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் முன்னணி நடிகர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும், கல்கி அவதாரம் குறித்து தவறான சித்தரிப்பு மற்றும் பொய்யான கருத்துக்களை படத்தில் இடம் பெறச் செய்ததற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த நோட்டீஸிற்கு படக்குழு உரிய விளக்கம் அளிக்கும் வரை படத்தை ஓடிடி தளத்திலோ மற்ற எந்த தொலைத்தொடர்பு தளத்தின் மூலமாகவோ வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம், படக்குழுவை அவமானப்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தான் நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும், மத உணர்வுகளை பாதுகாக்கும் நோக்கில் இருந்ததால் தான் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், படக்குழு இந்து மத உணர்வுகளை புண்படுத்தியும், சனாதன தர்மத்தை இழிவுபடுத்தியும் என்ன சாதிக்கப் போகிறார்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த சர்ச்சைகளுக்கு இடையில், கல்கி 2898 AD திரைப்படம் உலக அளவில் 1,000 கோடியும், இந்தியாவில் மட்டும் 600 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "ரகு தாத்தா இந்திக்கு எதிரான படமல்ல.." - கீர்த்தி சுரேஷ் விளக்கம்! - Keerthy Suresh about Hindi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.