ETV Bharat / entertainment

புதுமுகங்களுடன் களமிறங்கும் கே.எஸ்.ரவிக்குமார்.. 'யூ ஆர் நெக்ஸ்ட்' படம் பூஜையுடன் தொடக்கம்! - YOU ARE NEXT MOVIE - YOU ARE NEXT MOVIE

YOU ARE NEXT HORROR MOVIE: இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் யூ ஆர் நெக்ஸ்ட் படத்தின் பூஜை
கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் யூ ஆர் நெக்ஸ்ட் படத்தின் பூஜை (CREDIT -ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 3:26 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநராக வலம் வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினிகாந்த் தொடங்கி சூர்யா வரை முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய இவர், தற்போது தயாரிப்பாளர், நடிகர் என கலக்கி வருகிறார்.

இந்த நிலையில், மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில் முன்னணி நடிகர்களுடன் புதுமுகங்கள் அறிமுகமாகும் 'யூ ஆர் நெக்ஸ்ட்' (You Are Next) படத்தில் முக்கிய வேடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கிறார். மேலும், ரச்சிதா மகாலட்சுமி, உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரஃபி, 'புல்லட்' சமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள்.

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப் எழுத்து மற்றும் இயக்கத்தில் தயாராகும் படமே 'யூ ஆர் நெக்ஸ்ட்'.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இத்திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக உள்ளது.

இந்த நிலையில்ல் இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கே.எஸ்.ரவிக்குமார், "இந்த படத்தின் கதையை கேட்டவுடன் வித்தியாசமான ஹாரர் கதையாக இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. மேலும், இந்த திரைப்படம் இளைஞர்களுக்கான திரைப்படமாக உருவாகிறது. இயக்குநர் ஷரீஃப் இப்படத்தின் மூலம் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்றார்.

அடுத்ததாக பேசிய ரச்சிதா மகாலட்சுமி, "இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒத்துக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தைக் கொண்டது. உங்கள் அனைவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக இருக்கும்" என்றார்.

பின்னர் பேசிய இயக்குநர் ஷரீஃப், "யூ ஆர் நெக்ஸ்ட் திரைப்படத்தின் மூலம் நான் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகம் ஆகின்றேன். என்னையும், என் கதையையும் நம்பி இந்த படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட தயாரிப்பாளர்கள் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகிய இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திரைப்படத்தில் கே.ஜி.ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், அஜித் படத்தொகுப்பாளராகவும், டிஜிட்டல் மீடியா மூலமாக பிரபலமான அறிமுக இசையமைப்பாளர் 'இசை பேட்டை' வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். வேணு கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், 'கலைமாமணி' ஸ்ரீதர் நடனத்தையும் கவனிக்கிறார்கள்.

இதையும் படிங்க: "ராகுகாலம், எமகண்டம் என படத்திற்கு தலைப்பு வைப்பேன்" - விஜய் ஆண்டனி கலகல பேச்சு! - VIJAY ANTONY

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.