ETV Bharat / entertainment

"டி.ராமனுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது" - நடிகர் கமல்ஹாசன் புகழாரம்! - Kamal Haasan about Ramanujam

Actor Kamal Haasan: திரையுலகின் தந்தை டி.இராமானுஜம் என்று சொல்வது பொருத்தமானது என்றும், இவருக்கு விழா எடுக்க யார் யாருக்கு எல்லாம் எண்ணம் தோன்றியதோ அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள் நன்றி என டி.இராமானுஜம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

நடிகர் கமல்ஹாசன் புகைப்படம்
நடிகர் கமல்ஹாசன் புகைப்படம் (credit to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 9:31 PM IST

டி.இராமானுஜம் நூற்றாண்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசிய வீடியோ (credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: திரையுலகின் தந்தை டி.இராமானுஜம் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.

மேலும், இந்நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், கே.ஆர் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், சத்யஜோதி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, நடிகர் நாசர், திருப்பூர் சுப்பிரமணியன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “இது ஒரு குடும்ப விழா என்றால் மிகையாகாது. இந்த மேடையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் விழா நாயகர்கள். நான் சரவணன் ஐயாவை 20 வயதில் சந்திக்கும் போது அவர் கொடுத்த மரியாதை, நான் மற்றவர்களுக்குக் கொடுக்க உதவியது.

இதை நம் குடும்ப விழாவாக நடத்த விரும்பிய அனைவருக்கும் நன்றி. இது ஒரு சின்ன குடும்பம், பல விவாதங்கள் வரும். யாரையும் ரொம்ப திட்ட வேண்டாம். சினிமாவின் தந்தை என்று சொல்பவர்கள் எல்லாம் டி.இராமானுஜத்தின் நண்பர்கள். இவர் பெரிய பெரிய ஜாம்பவான்கள் உடன் பழகியவர். எங்களுடனும் பழகினார், பேசினார். டால்பியில் படமெடுக்க நினைத்த போது எங்களை அழைத்துப் பேசினார்.

இந்த விழாவில் என்னை அழைக்காவிட்டாலும் நான் வருவேன். டி.இராமனுஜத்தை திரையுலகின் தந்தை என்று சொல்வது பொருத்தமானது. இவருக்கு விழா எடுக்க யார் யாருக்கு எல்லாம் எண்ணம் தோன்றியதோ, அத்தனை பேருக்கும் எனது வணக்கங்கள் நன்றி” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் அஜித்குமார்? குட் பேட் அக்லி முக்கிய அப்டேட்! - Good Bad Ugly Movie Shot Hyderabad

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.