ETV Bharat / entertainment

ரஜினிக்கு பதில் கமல்? - அட்லீயின் புதிய பட அப்டேட்! - Atlee New movie

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 2, 2024, 4:40 PM IST

Salman Khan - Kamal Haasan Combo: இயக்குநர் அட்லீ சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சல்மான் கான், அட்லீ, கமல் ஹாசன் புகைப்படம்
சல்மான் கான், அட்லீ, கமல் ஹாசன் புகைப்படம் (Credits - IANS)

ஹைதராபாத்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் சமீபத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் அட்லீ சல்மான் கான் மற்றும் கமல்ஹாசனை வைத்து மிகப்பெரிய பொருட்செலவில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

ஆனால், சன்பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பிலோ, அட்லீ தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், இப்படம் பான் இந்தியா படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்த மாதம் இறுதிக்குள் போடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் சாதனையும் படைத்தது. ஜவான் படத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

அட்லீ முதலில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சல்மான் கானை வைத்து படம் இயக்க இருந்த நிலையில், தற்போது ரஜினிக்குப் பதிலாக கமல்ஹாசன் மாறி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன், கூலி ஆகிய படங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருப்பதால் இப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டாமல் இருக்கலாம் என ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க : 23 ஆண்டுகளுக்கு பிறகு யுவன் - பிரபுதேவா கூட்டணி.. சிங்காநல்லூர் சிக்னல் படப்பிடிப்பு துவக்கம்! - Singanallur Signal Movie Pooja

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.