ETV Bharat / entertainment

19 வயதில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா; நடுவராக பங்கேற்ற ’லெஜண்ட்’ பட நடிகை! - Rhea Singha Miss Universe India

Rhea Singha: குஜராத்தை சேர்ந்த ரியா சிங்கா 2024ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்கா (Credits - ANI)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 23, 2024, 11:46 AM IST

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 (Miss Universe India 2024) போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று (செப் 22) நடைபெற்றது. இந்தியா அளவில் நடைபெறும் இந்த அழகிப் போட்டியில் வெற்றி பெறுபவர் உலக அளவிலான மிஸ் யுனிவர்ஸ் 2024 அழகி போட்டியில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த ரியா சிங்கா (Rhea Singha) வெற்றி பெற்றார்.

இதில் இவருக்குப் போட்டியாக 51 பேர் கலந்துகொண்டுள்ளனர். தொடர்ந்து போட்டியில் வென்ற இவருக்கு பெரும் மதிப்புமிக்க "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024" மகுடம் சூடப்பட்டது. இதனையடுத்து 19 வயதான ரியா சிங்கா நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.

மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய ரியா சிங்கா, "நான் "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024" பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த பட்டத்தை பெற கடினமான உழைத்துள்ளேன். இதற்கு முன்பு இந்த பட்டத்தை வென்றவர்களிடம் இருந்து நல்ல மோட்டிவேஷன் கிடைத்தது," எனக் கூறியுள்ளார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை சுஷ்மிதா ராயும் பிடித்தனர்.

இதையும் படிங்க: " AI தொழில்நுட்பத்தை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்" - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்! - A R Rahman

இந்த போட்டியில் முன்னாள் "மிஸ் யுனிவர்ஸ் இந்தியா" பட்டத்தை வென்ற ஊர்வசி ரவ்தேலா நடுவராக பங்கேற்றார். அவர் பேசுகையில், "இந்த வருடம் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை மீண்டும் இந்தியா வெல்லும். நமது பெண்கள் இந்தியா சார்பில் கடினமான போட்டியை வழங்குவர். நமது பெண்கள் மிகவும் அழகாக இருக்கின்றனர். அவர்கள் கடினமாக உழைக்கின்றனர்," என்றும் கூறினார். ஊர்வசி ரவ்தேலா லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடித்த 'Legend' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.